சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 29 சிவ சிவ சிவ யநராதா – ராகம் பந்துவராளி

'பந்துவராளி' என்ற ராகத்தில் அமைந்த 'சிவ சிவ சிவ யநராதா' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

மாந்தரே! சிவ சிவ சிவவென்று ஜபம் செய்யக் கூடாதா?

(நீங்களனைவரும்) சிவ சிவ சிவவென்று ஜபம் செய்து உலக வாழ்க்கையின் தொல்லைகளைப் போக்கிக் கொள்ளக் கூடாதா?

காமம் முதலியவற்றை அடியுடன் அறுத்து, பர ஸ்திரீகளையும் பிறர் பொருளையும் (விரும்புவதை) வெறுத்து, மூடத்தனத்தை ஒழித்து, அதிநியமத்துடன் வில்வதளம் கொண்டு அருச்சனை செய்து (சிவ சிவ சிவ எனலாகாதா?)

நல்லோரை அடுத்து, அவர்களே தெய்வங்களென்று மனத்தில் கருதி, வெட்கம் முதலியவற்றை அகற்றி, இதயத் தாமரையில் சிவனைப் பூசித்து (நாமஸ்மரணை செய்யலாகாதா?)

வேதங்களோதிப் பரம்பொருளைத் துதித்து, பயனற்ற பேச்சுக்களை விலக்கி, பரம பாகவதருடன் கூடி நாம சங்கீர்ஹ்த்தனம் செய்து, இத்தியாகராஜன் வணங்கும் தெய்வம் அவனேயென்று கருதி (சிவ சிவ சிவவென்று துதிக்கலாகாதா?)

பாடல்

பல்லவி:

சிவ சிவ சிவ யநராதா ஓரீ (சிவ)

அனுபல்லவி:

ப வ ப யபா த ல நணசுகோரா தா (சிவ)

சரணம்:

1. காமாது ல தெ க கோ ஸி பர
பா மல பருல த நமுல ரோஸி
பாமரத்வமு நெட பா ஸி அதி
நேமமுதோ பி ல்வார்ச்சந ஜேஸி (சிவ)

2. ஸஜ்ஜந க ணமுல கா ஞ்சி ஓரி
முஜ்ஜக தீ ச்வருலநி மதி நெஞ்சி
லஜ்ஜாது ல தொ லகி ஞ்சி தந
ஹ்ருஜ்ஜலஜமுநநு பூஜிஞ்சி (சிவ)

3. ஆக மமுல நுதியிஞ்சி ப ஹு
பா கு லேநி பா ஷலு சாலிஞ்சி
பா க வதுலதோ போ ஷிஞ்சி வர
த்யாக ராஜ ஸந்நுதுட நி யெஞ்சி (சிவ)

வலைத்தளத்தில் Madurai Somasundaram Siva Siva Siva Pantuvarali @ Kapaleeshwarar Temple என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் மதுரை S.சோமசுந்தரம் பாடுவதைக் கேட்கலாம்.

வலைத்தளத்தில் Thyagaraja Kriti - Siva Siva ena radha- Raga Pantuvarali-singer-DR YESUDAS என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் K.J.ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்கலாம்.

வலைத்தளத்தில் Thyagaraja Krithis by TM Krishna | Jukebox என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் T.M.கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

வலைத்தளத்தில் Shiva Shiva Shiva - Raga Pantuvarali - Jon Higgins என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் மறைந்த ஜான் ஹிக்கின்ஸ் பாடுவதைக் கேட்கலாம்.

வலைத்தளத்தில் Deekshita- Sivasiva ena radha-Panthuvarali-Thyagarajar என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் தீக்‌ஷிதா பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-18, 7:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே