சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 4 சக்கநி ராஜமார்க மு – ராகம் கரஹரப்ரியா

பல்லவி:

சக்கநி ராஜமார்க மு லுண்ட க
ஸந்து ல தூ ரநேலே ஓ மநஸா (சக்கநி)

அனுபல்லவி:

சிக்கநி பாலு மீக ட யுண்ட க
சீயநு க ங்கா ஸாக ரமேலே (சக்கநி)

சரணம்:

கண்டிகி ஸுந்த ரதரமகு ரூபமே முக்-
கண்டி நோட செலகே நாமமே த்யாக ரா-
ஜிண்டநே நெலகொந்நாதி தை வமே யிடு-
வண்டி ஸ்ரீஸாகேதராமுநி ப க்தியநே (சக்கநி)

பொருளுரை:

மனமே! அழகிய இராச வீதிகளிருக்கையில் சந்துகளில்
நுழைவானேன்?

புஷ்டி தரும் பால், ஏடு முதலியன இருக்கையில் சீயென்று
வெறுக்கத்தக்க கள் எதற்கு?

கண்ணிற்கு இன்பம் தரும் அழகிய வடிவமும்,
சிவபெருமான் நாவில் விளங்கும் திருநாமமும்,
தியாகராஜன் இல்லத்தில் என்றும் இருப்பிடமும்
உடைய ஸ்ரீ ராமபிரானின் பக்தியெனும்
(இராச வீதியிருக்கையில் சந்துகளில் நுழைவதேன் மனமே?)

யு ட்யூபில் ஸ்ரீரங்கம் கோபாலரத்னம், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், K,J.ஜேசுதாஸ், மதுரை மணி அய்யர், D.K.பட்டம்மாள் மற்றும் பலர் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-18, 7:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே