கனவுக்கன்னி

தலதலன்னு தழஞ்சவளே - என்ன
தவிடுபொடியாக்க வந்தவளே
தனக்குபோகத்தான் தானமுன்னு
தங்கமனசுக்குள்ள நெனச்சவளே

தாகத்துக்கு உன்ன - எனக்கு
தானமா தந்தவளே
தாவணிகட்டி எம்மனச
தாலிகட்டி இழுத்தவளே

திங்கத்திங்க இனிச்சு - பசிய
திக்குமுக்காட வச்சவளே
திங்கமுதல் வெள்ளிவர
திணுசுதிணுசா சமஞ்சவளே

தீஞ்சுபோன கரிநான் - என்ன
தீண்டிப்போன பொண்ணுநீ
தீராத ஆசையெல்லா
தீத்துப்போன கனவுக்கன்னிநீ

தும்மல்வந்து நாகுனிஞ்சா-எனக்காக
துடிச்சுப்போயி ஓடிவந்தவளே
துரும்பா நாஎளச்சா
துக்கத்துல சோந்துபோனவளே

தூரமா என்னவிட்டுப்போகாத
தூள்தூளா ஒடஞ்சுறுவே
தூங்காம நானிருந்து
தூசிபோல படிஞ்சிறுவே !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (4-Jan-18, 12:15 pm)
பார்வை : 171

மேலே