எங்கே நான்

அலை போல்
சிணுங்கும் அவள்
அலைக்கற்றை குழலொதுக்கும்
இரு விரலின்
இடைவெளிக்குள்
என்
இதயத்தை செருகிவிட்டாள் !!...
தொலைந்து போன
மனதை
தொலைதூரம் தேடினேன் ....
வெகு தூரம் ஓடினேன் .....
எனதருகில் நின்றிருக்கும்
என்னவளின்
சிறு விழியில்
மயங்கியிருப்பதை
மறந்து !!....