எந்தனை தேனடி

உனை போல்
ஒரு சிலை வடிக்க
உளி எடுத்தேன்.

உன்
விழியால்
நிலைகுலைந்து
போனேன்.

உன்
இதழால்
இதழ் மூட
மறந்தேன்.

உன்
தணிக்கையில்
தடம் மறந்து
போனேன்.

உன்
இடையினில்
எடை இழந்து
பறந்தேன்.

உன்
ஒற்றை புள்ளியில்
ஓய்வின்றி
விழித்தேன்.

உன்
உச்சி முதல்
உள்ளம்
கால் வரை.
எத்தனை
தேனடி
பருகிய நான்
உளியோடு
சிலையானேன்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (4-Jan-18, 4:40 pm)
பார்வை : 138

மேலே