முந்தானையில முகமூடி

கண்ணு பட்டு போகுமென
த்ரிஷ்டி பொட்டு
வெச்சு விட்டாளோ
உன் அம்மா ??
கருவறைக்குள்ள காவல் வெச்சு
பொத்தி பொத்தி
வளத்தாலோ
உன் அம்மா ??
ஊர் கண்ணு உலக கண்ணெல்லாம்
உன் மேல பட கூடாதுன்னு
முந்தானையில மூடித்தான்
வீதி உலா அனுப்பி
வெச்சாளோ
உன் அம்மா ??
திட்டம் போட்டு செய்யலைனாலும்
திருட்டு தனமா
ரசிச்சுப்புட்டேனடி
ராசாத்தி .....
உன்னழக பாடத்தான்
ஒரு வார்த்த இல்லையேடி
கண்ணாட்டி....
செக்கு போல சுத்தி வரேன்
செத்த நேரம்
நின்னு புள்ள
சோளி போட்டு பாத்து புட்டேன்
உன சொந்தமாக்க நேந்து கிட்டேன்
அத்தனையும் அள்ளி தாரேன்
உன்ன மட்டும்
தருவாளா
உன் அம்மா ???....

எழுதியவர் : Nisha (4-Jan-18, 4:43 pm)
பார்வை : 228

மேலே