என் தேவதை

நீ மழை நீரில் விளையாடுகிற போது
மழை நீர் கூறியது நான் அதிஷ்டம் செய்தவன் என்று!
ஏனென்றால் உன் பொன்னான மேனியில் விழுந்ததால்

நீ பூக்கள் பரிக்கும் போது
பூக்கள் கூறியது நான் மறு ஜென்மம் எடுத்துவிட்டேன் என்று!
ஏனென்றால் உன் கைகளால் அதை பறித்ததால்.

நீ சூரிய ஒளியில் நின்ற போது
சூரியன் ஓடி மறைந்து கொண்டது மேகங்களுக்கு இடையில்!
ஏனென்றால் உன் அழகை பார்த்து.

நீ நடந்து சாலையில் சென்ற போது
மரங்கள் கூட பூக்களை உதிரச் செய்தது!
ஏனென்றால் உன் பாதங்கள் சாலையில் படாமல் இருக்க.

ஆனால் நீ என் நிழலில் நின்ற போது
என் வாழ்க்கையை உன்னிடம் குடுத்தேனடி!
ஏனென்றல் உன் மனதை பார்த்து..........

எழுதியவர் : முத்துக்குமார் (4-Jan-18, 6:04 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : en thevathai
பார்வை : 182

மேலே