காதலை தூவும் கண்கள்

உன்னிடம்,
சிந்தும் கண்ணீரும் கெஞ்சும்
என் காதல்
கடல் ஆழத்தையும் மிஞ்சும்
தீயாய் தகிக்கும் நெஞ்சம்
என் மீது
உனக்கில்லையா துளி நேசம்

நிலவின் அருகே நான்
அவள்
நடையோ துள்ளும் மான்
பூவின் நிழலில் நான்
அவளின்
இதழ் சிந்தும் காதல் தேன்

துயில் கொள்ள
புல்வெளியே என் மெத்தை
இது அந்த
தத்தை செய்யும் வித்தை
நானோ காதலை
சுமந்து அலையும் நத்தை

இந்த
பூவுலகின் அழகியே
என்
காதலுக்கு நீதான் தலைவியே
எனக்குள்
தோன்றும் காதல் ஆசையே
என்னை விட்டு நீ
தூர போவதேன் விலகியே!

உன்
கண்கள் சொல்லும் கதைகள்
அது பலர் இதயத்தில்
தூவும்
காதல் விதைகள்.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (5-Jan-18, 1:47 am)
பார்வை : 229

மேலே