கோபம்

கோபம்...

பெருமைகொள்ள வேண்டிய குணாதிசயமல்ல கோபம்...

கோபத்தினிமித்தம் பெருமைபட்டுக்கொள்ள இவ்வுலகில் ஒன்றுமே இல்லை...

அன்பை புறந்தள்ளியே கோபத்திற்குப் பழக்கம்...

வெறுப்பை மட்டுமே முகமாகக் கொண்டது கோபம்...

மனிதத்தை உணர மறுப்போர் கொஞ்சம் கோபத்தை உடைத்தெறிந்து பாருங்கள்....

பகையை வளர்த்தெடுக்க கோபத்திற்கு நிச்சயம் தூது அனுப்பலாம்...

பாசம் என்னும் அழகிய பூவை கசக்கி எறிய கோபத்திற்கு நிகர் யாருமே இல்லை...

எல்லைகளற்ற நேசம்கொண்ட, மனங்களை ஆக்கிரமித்து, துன்பத்தில் இன்பம் காண்பது கோபத்திற்கு கைவந்த கலை...

அன்பு மட்டுமே சிறந்தது; கோபத்தை அன்பினால் கைது செய்ய முயற்சித்துப் பாருங்கள்; வாழ்க்கை என்னும் கையெழுத்து அழகாக மாறும்...

எழுதியவர் : ஜான் (5-Jan-18, 7:25 am)
Tanglish : kopam
பார்வை : 480

மேலே