பெண் எனும் பிரபஞ்சம்

பெண் எனும் பிரபஞ்சம்..!
====================

விண்ணில் காணும் கார்மேகத்தையும் வெண்ணிலவையும்..
...............வியந்து நோக்கும்போது என்னுளவளே தெரிகின்றாள்.!
மண்ணில் உலவும் அனைத்துயிரிலும் அன்புணர்வுகள்..
...............மலர்வதைப் பார்க்கின்றேன்!....அவளின் கருத்தரிப்பில்.!
தண்ணீரில் மிதக்கும்தாமரையும் அல்லியுமலர்வது அவளின்..
...............தளிர்நடை கண்டபிறகுதானென கவிதையும் பாடுவேன்.!
மண்டலத்தில் மாறாத வாசமனைத்துமவள் சொந்தமோ?.
...............பெண்ணவள் பிரபஞ்ச மனைத்திலும் நிறைந்திருப்பாள்.!


மண்ணிலவதரித்த அழகான மனுஷியர்களங்கே கூடுவார்..
...............மானுடர் நிறையுமேடையும் அண்டமும் இதைக்காணும்.!
பெண்தானுலகிலேயே அழகுப் பண்டமெனக் கூடிப்பேசுவர்..
...............பொன்னுமுத்துமணியாப் பேரழகி யாரெனறிய முனைவர்.!
பெண்ணுக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை? அழகியர்தன்..
...............பேச்சில் நடையழகில் நாடுபுகழச்செய்வர்!.நடப்புவருடம்.!
பெண்ணெனும் பிரபஞ்சழகியைப் பெற்றெடுத்த பெருமை..
...............பாரதமென!..பாருலகு அறியவைத்தார் மானுஷிசில்லார்.!


இரும்புமனுஷி எனவெப்போதும் இவரைப் புகழுவார்கள்..
...............இழந்தும் இன்றுவரை இவர்தான் பெண்சிங்கமென்பார்.!
பெரும்பேரன்பு இவர்மீது கொண்டவர்கள் ஏழரைகோடி..
...............பெற்றவளைவிட்டு இவரையே தாயாகக் கொண்டார்கள்.!
அருளும் அன்னதானமெனும் அருங்கொடை தந்ததால்..
...............அலையுமேழையர் வயிற்றுப் பசியறியா உணர்வுற்றனர்.!
பருவமங்கைமுதல் பிரகாசித்து பரலோகம் செல்லும்வரை..
...............பிரபஞ்சமே புகழப் பெருமையுற்றவளொரு பெண்தான்.!


தீவிரவாதத்துள் அமிழ்ந்திருந்த அத்தீயவர்களுக் கெதிராக..
...............தீக்குரல்கொடுத்தவள் குண்டுகளைப் பரிசாகப் பெற்றாள்.!
பாவியரின் கொடுஞ் செயலவளைப் பள்ளத்தாக்கிலிருந்து..
...............பார்புகழும் ஐநாசபைவரை அழைத்துப் புகழ்சேர்த்தது.!
ஜீவிதத்திற்குப் பெண்கல்வியும் சமத்துவமும் அவசியமென..
...............சீராகயுழைத்து சிறப்புற்ற நோபல்பரிசினை வென்றாள்.!
மாவீரத்துக் கடையாளமாய் மாலாலாவெனும் மகத்தான..
...............முத்திரையை இளவயதுமங்கை பிரபஞ்சத்தில் பதித்தாள்.!

=====================================================

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::11-12-17

நன்றி :: கூகிள் இமேஜ்

ஆண்கள் பல சமயங்களில், வேறு வேறு கண்ணோட்டத்தோடு பெண்களைப் பார்க்கும்போதும், அவர்களின் சாதனைகளை எண்ணும்போதும், சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலைக்குச் செல்லும்போதும் “ஒரு பெண்ணால் இப்படிச் செய்யும் போது” நம்மால் முடியாதா..? என்கிற சிந்தனை ஆண்களில் பெரும்பாலோருக்கு எழுவது சகஜம்.
ஆனால், அவர்களால் இவ்வித சாதனைகளையும், பெருமையையும் பார்க்கும்போது, அவர்களுக்குள்ளே ஒருவித தாழ்மையுணர்ச்சியும் எழலாம். வாழ்வில் ஒருவித தாங்கொணாத் துன்பம் வரும்போது, அதைத்தாங்கும் சக்தியும், எதிர்கொள்ளும் சக்தியும் சற்று அதிகமாகவே பெண்களுக்குதான் படைத்திருக்கிறான் இறைவன். மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப் படி ஆண்களை விட பெண்களுக்குத்தான் இத்தகைய திறமை அதிகம் என்கிறார்கள்.

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (5-Jan-18, 10:10 pm)
பார்வை : 2642

மேலே