அவங்க யாரும் இதை வாசிக்க மாட்டாங்க

அவங்க யாரும் இதை வாசிக்க மாட்டாங்க
=======================================

உள்ளூர அர்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
உடல் இயலாமையின் போது
முகம் எப்படியோ இங்குள்ள நால்வருக்கு
காட்டிக்கொடுத்துவிடத்தான்
செயகிறது
மனசு தாங்கும் வலிகள் போல
முகமிருந்தால்
எவ்வளவு நல்லா இருக்கும்
ஒப்புக்கு ஒரு ஹாய்
சொல்லி
என்னாச்சுன்னு கேட்டதன் பிறகு
டீக்கே
டேக் கேர் ஒஃப் யுவர் ஹெல்த் பாபா
என்று கடப்பவர்களை
காணும்போதுதான்
அந்த இனிமையான ஆர்குட் காலத்துக்குப்பிறகு
துபாய் வாழ்க்கைக்குப்பிறகு
அவ்வப்போது
நம் அலைப்பேசிகள்
ஒன்றோடொன்று சிணுங்கிக்கொண்டாலும்
நாமெல்லாம்
எங்கு போய்விட்டோம் என்று தோன்றுகிறது வினோத்
நீ குடிக்கும்போதெல்லாம்
உன் பழைய லவ் ஸ்டோரி ய
என்கிட்டே மட்டும் சொல்லி சொல்லி அறுப்பியே
அதை இன்னமும்
யார்கிட்டயாவது செஞ்சிக்கிட்டிருக்கியா வினோத்
அந்த ஆள்
என்னுடைய நினைவுகளை உனக்கு தர்றானா வினோத்

கத்தார்ல
நா இருக்கும்போது
என்னோட ஒரு பிறந்தநாள்
இரவுல
எல்லோரும் வந்து
கேண்டில் வெளிச்சத்துலயே உக்காந்த்து
பேசி பேசி
ஒரு நள்ளிரவுல
லூலூ சென்டர் போயி
சமைக்க சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்து
பீச் மோட்டல் போயி
சேம்பைன் வாங்கி வந்து
அந்த இரவை எனதாக்கி தந்துட்டு
விடியும்போது
கார்னிஷ் போயி
வாலிபால் விளையாடும்போது
முந்திபோல
ஏ உன்னால விளையாட முடியல
வயித்த கொறடா ன்னு
கேலி பண்ணப்போ
டேய் சும்மா இருங்கடா
அவன் எத்தனை பேருக்கு வயித்துலக் ன்னு
பிரியத்தமா
A ஜோக் சொல்லும்போது
அந்த சிரிப்புவெடி மிஸ் பன்றேன்னு நினைக்கும்போது
சொல்ல வார்த்தைகள் இல்ல

சவுதியில
எனக்கு வீடில்லைடா ஷஷாங்
ஏதோ ஒரு பாலைவனத்துல செவன்ஸ்டர் பெசிலிட்டி
கொடுத்திருக்காங்கடா
நீ இங்க வந்தா
உன் பொண்டாட்டிக்கு தெரியாம
என் கையால
சிக்கன் சாப்பிட முடியாதுடா
அய்யங்கார் பையா
யாரையுமே உன் வீட்டுக்குள்ள அனுமதிக்காத
உன் அக்மார்க் அய்யங்கார்
மனைவி சுரபி
என்னைமட்டும் பூட்ஸ் காலோடாவும்
மீதம் மிஞ்சிய
சிகரெட் வாசனையோடவும்
உன் வீட்டுக்குள்ள
அனுமதிப்பா
எப்போவாவது நாம ஒண்ணா இருக்கும்போது
உனக்கு போன் பண்ணி
எங்க இருக்க ன்னு கேப்பா
நீயும்
நா அனுக்கிட்ட இருக்கேன்னு சொல்லுவா
போன எனக்கு குடுக்கச்சொல்லி
நைட் ஆகிட்டா அனுப்பாதீங்க
அங்கேயே தங்க வச்சிடுங்க ன்னு சொல்லுவா
நீ வேறே யார் வீட்ல
இருந்திருந்தாலும்
அவ உன்னை தங்க விட்டிருக்க மாட்டா ம்ம்
என் மேலுள்ள
இந்த நம்பிக்கை
அவளுக்கு நீ கொடுத்ததா
இல்ல
அவளுக்கு தானா வந்ததான்னும் தெரியல
எனக்கப்புறம்
இப்படி ஒருத்தன்
உன் லைஃப் ல இருக்கானா ஷஷாங்

மகி இறந்தப்போ
என் பக்கத்துல நீ
எவ்ளோ ஆறுதலா இருந்த பூர்ணிமா ம்ம்
உன் காதல்
அப்போ எனக்கு புரியலை
நீ என்னைவிட
என் நண்பனுக்குத்தான் பொருத்தமானவ ம்ம்
மேலும் சந்தோஷமா இரு

நர்மதா
குட்டிக்குரங்கு
எவ்வளவுக்கெவ்வளவு உனக்கு நான்னா
பிடிக்குமோ
அவ்வளவுக்கவ்வளவு நீ என்னை
வெறுத்த
அவன் உனக்கு சரியா வரமாட்டாண்டா வாலுன்னு
சொன்னப்போ
உன் காதல் கணவனுக்காக
என்கிட்டே நீ பேசாமயே போயிட்ட
நீயும் அவனும்
நார்வே போறப்போ
நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லோரும் உங்களை
வழியனுப்ப ஏர்போர்ட்
வந்தாங்க
அங்கேயும்
ஒரு அழைக்கா விருந்தாளியா
உன் முன்னாடி வந்து நின்ன
நீ என்னை திரும்பி கூட
பாக்கலை வாலு
ஒரு டாட்டாக்கூட சொல்லாம போயிட்ட
இதெல்லாம்
தாங்கிக்கிறப்பக்குவம் எனக்கு அன்னைக்கே
மகி சொல்லிக்கொடுத்திருந்தா
அவளோட இறப்பின் மூலமா ம்ம்
அவனை நன்கு
படித்தவளாக
ஒருநாள் அங்கிருந்து எனக்கு போன் பண்ணி
இதையெல்லாம் நீ
சொல்லி அழுத
என் மனசு அப்போ எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்னு
நினைச்சு நினைச்சு அழுத
அந்த கொஞ்சநாள் பிரிவுகூட எனக்கு பெருசா படல
எனக்கு தெரியும்
நம்ம நட்பு இதையெல்லாம் கடந்ததுன்னு
நீ வருமீண்டுமுன்னை
எனக்கு ஏற்கும் பக்குவம் முன்னாலேயே இருக்குடா வாலு
துபாயில்
அதிகமா என்கூடத்தான் இருப்ப
உங்கண்ணன் வீட்ல கூட இருக்கமாட்ட
ஊட்டியில்
ஹில் டா'ஸ் அலுமினியில
சந்திக்கிறப்போ எல்லாம்
நம்ம கழுத்தைப்பிடிச்சு
கட்டி உருண்டு சண்டை போட்டு
முகரையை உடைச்சி பின்னாலும்
ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு
தோள்மேலே கைப்போட்டுக்கிட்டே நடக்குற
நம்ம பழக்கம்
இப்போ ஒரு அஞ்சாறு வருஷமா
நா அங்க வரவே இல்லை
நீ யாருகிட்ட சண்டை போடுவ ம்ம்

நாம கைப்பிடிச்சு
ஒண்ணா ஸ்கூல் போன காலத்திலிருந்து,
கடைசியா உங்க எல்லோருக்கும்
டாட்டா சொல்லி கடந்த நாட்கள்வரை,
ஊட்டி பிக்ஷாப் ல இருந்து
நான் அப்போ வாங்கிக்கொடுத்ததா சொல்லி,
ஒவ்வொருமுறையும்
என்னைப்பாக்கவரும்போதெல்லாம்
உன் கைகளில்
எப்போதும் வைத்திருப்பாயே
க்ரே கலர் கரடி பொம்மை அது இன்னமும் இருக்கா வாலு

சில நேரம்
அதை உன்னோட சேர்த்துவச்சி
அங்கதம் பண்ணுவேன் ...

""கைகளில் டெடி பியர் வைத்திருக்கும்
கரடிக்குட்டியா நீ """"
என்றுச்சொல்லி ,,,
நீயும் அப்போ அதிகமா கோபப்பட்டா மாதிரி
பெர்பாமன்ஸ் பண்ணிப்ப ,,

அதுக்கப்பறம் கூட அந்த வார்த்தையை
நீயில்லாமல் போன
தருணங்களில்
சிலரிடம் சொல்லிருப்பேன்,
ஏனோ அவர்கள் அந்த உணர்வை எனக்குத் தரவில்லை வாலு

என்னை ப்ரபோஸ் பண்ணி விஷம் குடிச்சாளே ஆஷா,
மணியன், கருவாளி ஆறுமுகம், முருகையா,
பிரசன்னா
இத்தனைப்பேரும்
இன்னமும் கூட டைரியில் இருக்கானுங்க

"""ஒருவர் மாற்றி ஒருவர் என
ஒளியில் தொகைந்து போனவர்கள் நாம்
நம் ஒவ்வொருவருடைய
குணங்களைத்தாண்டி
ஒருமித்துப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும்
வேறு வேறு துருவங்கள் நாம்""

"நாம் நண்பர்கள்"

""""செல்போனில்
பிடித்தவளிடம் ஒரு முத்தம் கேட்டுவிட்ட
அடுத்தநொடி
அங்கே நிலவும்
மைக்ரான் செகண்ட் நிசப்ததையைப் போல """

""அப்பப்போ
நம்ம நட்பை மிஸ் பண்ணுறேன்னு
நினைக்கும் நொடி
எனக்குள் நிலவும் மௌனம்
இதம் தான் ""

""எதுக்கோ உங்களை பிரியநினைத்து
பிரிந்த பின்னால்
எனக்கென தேடிய ஆறுதல்களில்
எத்தனை விரல்கள்
மீட்டிவிட்டு,
எத்தனை விரல்கள்
வாசித்துவிட்டு,,
எடுத்துவைக்காமலும்
மடித்துவைக்காமலும்
அப்படி அப்படியேக் கிடத்திப்போன
புத்தகமோ, வீணையோ, ஆகியிருந்தேன் நான் ""

தேக நிலையோ,
அருவ நிலையோ, சரியில்லாத போது
நேசிக்கப்படுகிறவர்களால்
ஒரு க்ளாஸ் சுடுதண்ணியளவு ஆறுதல்கள் கூட
நமக்கு சொந்தமில்லை
என்று நினைக்கும்போது
அப்படியே ""போய்விடுகின்றன சில கணங்கள் ""

""போற இடமெல்லாம்
நம் நினைவுக் கூட்டை சுமந்துகொண்டு
போகும் மனம்
ஒரு நத்தையைப்போல ஊர்ந்து போகிறது""


அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (6-Jan-18, 2:00 am)
பார்வை : 116

மேலே