கைவிலங்கு

இலஞ்ச ஊழலில் சிக்கிய
பிரபலம் வாய்ந்த அரசியல் பிரமுகரைக்
கைதுசெய்து அழைத்துச் செல்லும்போது
அந்தக் காவல்துறை அதிகாரிக்கு
பீதியூட்டியபடி இருந்தது
காவல் நிலையம் செல்வதற்குள்
உடைந்து விழும் அபாயத்தை
எச்சரித்தபடி துருப்பிடித்த
அந்த பழைய விலங்கு.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Jan-18, 4:20 pm)
பார்வை : 108

மேலே