நட்பே உனக்காக

நான் நம்மை விட்டு பிரிந்தபோது
நீ அழாமலிருக்கக்கண்டு
உன்னை கல்மனம் என நினைத்தேன்.
நான் அழாமலிருக்க, நீ கல்லாகி நின்றாய்.

ஈராயிரம் நாட்கள் ஒன்றாய் வாழ்ந்தும்
ஏனோ அந்த கடைசி அறுபது நாட்களில்
உன்னை என்னில் கண்டேன்.
இத்தனை நாட்கள் எங்கு சென்றாய் என கேட்கவில்லை ...
நீ என்னில் இருந்தும் அறியாமலிருந்தேன் !!!

உடனிருக்கும் அனைவருக்கும் நாம் யார் என்பதறியாமலிருக்க !!
நமக்கு மட்டும் நம் உயிர் நம்மில் மாறியது தெரிந்ததேனோ??
இன்றும் மற்றோருக்கு புதிராய் இருக்க
நம் உயிரில் பரிமாற்றம் தொடர்வதேனோ?

எத்தனை மொழி யான் கற்றாலும்
உன்னை கண்ட அந்த ஒரு நொடியில்
கற்றதனைத்தும் மறந்து , உனைச்சொல்ல
இன்றளவும் எனக்கோர் வார்த்தை .......
கிடைக்காமல் விழிப்பதேனோ?

காற்றில் பறக்கும் உருவம் கொண்டு
கபடமறியா மனமும் கொண்டு
பால் போல் அன்பை பொழிந்து
என்னை தூக்கமில்லாமல் தவிக்க விடுவதும் தான் ஏனோ???

எழுதியவர் : சேவகி (8-Jan-18, 11:56 pm)
சேர்த்தது : Sevagi
Tanglish : natpe unakaaga
பார்வை : 862

மேலே