தோழியுடன் நான்

தோழியே!
உனக்காக கண்ணீர் சிந்த
நான் இருக்கிறேன்
சுமைகளை என்னோடு இறக்கிவிடு
நிலம் தாங்கும் முன்
உன் கண்ணீர் துளிகளை
தாங்கும் என் கைகள்

உன்
மகிழ்ச்சிவில் நான் மகிழ்வேன்
மகிழ்வதை இரட்டிப்பாக்கு
சிரிக்கும் உதடுகளுடன்
நீளட்டும் நம் பயணம்

மழலை மொழி
மகிழ்வதை போல்
உன் மலர் போன்ற இன்பம்
மலர்ந்து விரியட்டும்
மணம் வீசட்டும்

தோழியே! மறவாதே !!
உன்
துன்பத்தின் முன் நான் நிற்பேன்!
இன்பத்தின் பின் நான் நிற்பேன்!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (8-Jan-18, 5:52 pm)
Tanglish : thozhiyudan naan
பார்வை : 684

மேலே