பொங்கல் பண்டிகை
இயற்கைக்கும்
மனிதனுக்கும்
இருக்கும் உறவை
பறை சாற்றும்
பண்டிகைகள்
தமிழ் நாட்டில்
குறைவில்லை
உழைப்புக்கும்
ஒற்றுமைக்கும்
உயர்வு தந்து
போற்றி வழிபட்ட
தருணங்களாய்த்
திருநாட்கள்
தித்திக்கும் கரும்பும்
கொத்து மஞ்சளும்
வைத்து
வேளாண்மைக்கு
படைக்கும் திருவிழா
பொங்கல் பண்டிகை
நீர் வளமும்
நிலவளமும் பெருகி
விவசாயம் செழித்து
மக்கள் நலம் பெற
பொங்கல் கொண்டாடி
வாழ்த்தி மகிழுவோம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
