என்னவளே

நீ
அருமையாக
காதல் கவிதை எழுதுகிறாய்"என்று
எல்லோரும்
என்னைப் பாராட்டும் போது...
குற்ற உணர்வில்
நான்
குறுகிப் போகிறேன்...
ஏனெனில்...
அந்தப் பாராட்டுக்கள் எல்லாம்
என்னவளே!
உனக்குத்தான் சொந்தமானது...
ஆம்....!
எழுதுவது
நான்தான் என்றாலும்
என்னை
எழுத வைப்பது
நீ தானே....!

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Jan-18, 12:56 pm)
Tanglish : ennavale
பார்வை : 313

மேலே