பாரடா மானிடா
என்ன பலன் செய்துவிட்டோம் பாரினில் பிறந்துவிட்டு
மண் திண்ணும் உடலுக்கு
மகத்துவம் தேடிவிட்டு
மனிதாபமானம் பறக்க விட்டோம்
பாரடா நீதியை
பாமரனின் பசி செய்த கோலத்தை
ஏனடா இந்த வேதனை
யார்? ஏற்றி வைத்தார் இந்த தீபத்தை
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
இந்த சகத்தினை அழித்திடுவோமென்றும்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம்
வாடினேனென்றும்
வாய் மொழிந்த பெரியோர் கூற்று மறந்து போனதோ?
கொடிதிலும் கொடிது வறுமை
அதனிலும் கொடிது
வறுமை சூழ்ந்த ஏழ்மை
என்று மாறுமோ இந்த நிலை?