பக்தன்

கோடி வரம் வேண்டி கோவிலில் நுழைந்தோம்
கடந்து வந்தவனை பார்க்கவில்லை
அழுக்கு சதையூற விரல்கள் தடுமாற
பிச்சை கேட்ட குரல் கேட்கவில்லை
வாயில் சுவரோரம் வயிற்று பசியோடு
காத்து கிடப்பவனின் பசி மறுத்து
உண்டி உருண்டுவிட பணத்தை நிரப்புபவன்
பக்தன் என்ற நிலை என்று மாறுமோ!