விதியோடு விளையாடு

நதியின் பயணமாய்
நன்மைகளே செய்துவிட
நம்பிக்கை மனதால்
நாள்தோறும் போராடு..!
மண்ணுடன் போட்டியிட்டு
மரமாகும் விதையாக
மதியின் கூர்மையால்
விதியோடு விளையாடு..!
சத்தியம் தவறாமல்
சங்கடங்கல் நிகழாமல்
சதிகார சூழ்ச்சிகளே
சாதுர்யமாக வென்றுவிடு..!