இலக்கு

இன்று விதைத்தால்
இன்றே முளைத்திடலாம்
ஒருபோதும் கனி தந்திடாது,
விதிப்பவன் பிறந்தாலும்
விதிவிலக்கு இல்லடா,,

கானல்நீரை பருகுவதுதன்
குறுக்குவழி ஒட்டம்,
வாழ்வில் விவேகமிருந்தால்
வெற்றி உன்கையிலடா...

இருப்பதை வைத்து
இலக்கை துரத்து
இறுதியில் புரியும்
இறைவன் கணக்கு

நிலைமை மாறினாலும் -தன்
நிலை மாறமால் நீயிருந்தால்
நீயும் சரித்திர நாயகன்டா................

எழுதியவர் : செ.நா (10-Jan-18, 12:35 pm)
Tanglish : ilakku
பார்வை : 1967

மேலே