பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் பொங்க //
எண்ணம் எல்லாம் இனிமை பொங்க_கண்ணம்மா
ஆசை கனியே அள்ளு சுவையே
அள்ளி உண்ண
ஆனந்தத்தை கட்டி அணைக்கிறியே

நேசமுள்ள வான்சுடரே //
நேயத்தை எப்படி சொல்ல//
பயிர் செழிக்க விளைச்சல் பெறுக//
நிறை நிம்மதி தந்த சோதிமுகமே

நாமும் உன்னை கொண்டாட//
தமிழரின் தமிழ் தை முதல்நாள்
இன்று பிறந்தாய் திருநாளே//

தமிழரின் மனங்களில் மிளிரும் தைமகள்
காலத்தின் பெட்டகமாய் உலவுகின்றாய்
தமிழரின் நெஞ்சில்
உணர்வாய் உருவனாய்

எழுதியவர் : காலையடி அகிலன் (14-Jan-18, 10:54 am)
Tanglish : pongalo pongal
பார்வை : 95

மேலே