தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி9

அசோக்கும், சிவாவுக்கும் காலை வேலைகளை முடித்துக் கொண்டு, அவசரமாக சாப்பிட்டுவிட்டு வெளியே கிளம்பினார்கள் ஒன்றாக..

இருவரும் தனக்கு முன்னால் கிளம்பிச் செல்வதைக் கண்ட சித்ராவுக்குச் சந்தேகம் தோன்ற, " எங்க கிளம்பி போறீங்க? ",என்றாள்.

" சிவா அண்ணனுக்கு பொண்ணு பார்க்கப் போறோம்! ",என்று அசோக் உண்மையைச் சொல்ல, " டேய் தம்பி! சீக்கிரம் வாடா. ",என்று பைக்கில் அமர்ந்தபடி சிவா அழைக்க அசோக் ஓடி வந்து ஏறிக் கொண்டான்.

" டேய்! என்னைக் கூப்பிடாம போறீங்களே டா! ",என்று சித்ரா கோபப்பட்டாள்.

அதற்குள் பைக்கில் கிளம்பிச் சென்றுவிட்டார்கள் இருவரும்.

" ஏடி சித்ரா! இன்னும் கிளம்பாம என்ன பண்ற?. நேரமாச்சு! ",என்றபடி வந்தாள் நந்தினி.

" இதோ கிளம்பிட்டேன்டி. ",என்றபடி புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சித்ரா.

நந்தினியும், சித்ராவும் மற்ற தோழிகளோடு பேருந்து நிறுத்தம் வர, அங்கே நின்றிருந்தார்கள் சிவாவும், அசோக்கும்.

" பொண்ணு பார்க்க போறோம்னு சொல்லிட்டு இங்க என்ன பண்றாங்க? ",என்று யோசித்தாள் சித்ரா.

" என்னடி சித்ரா? அதிசயமா இருக்கு! ",என்று கீதா கேட்டாள்.

" அட ஆமா! புயலும், தென்றலும் ஒன்னா இங்க என்ன பண்ணுதுங்க? ",என்றாள் கல்பனா.

" எனக்கு தெரியாது. இருங்க, கேட்டு வந்து சொல்றேன். ",என்று கூறிவிட்டு, சித்ரா அண்ணன்கள் நிற்கும் பக்கம் வந்தாள்.

" என்ன அண்ணே! பொண்ணு பார்க்கப் போறோம்னு சொன்னீங்க. இங்க நிற்குகிறீங்க? ",என்றாள் சித்ரா.

" பொண்ணு பார்த்தாச்சு மா. அண்ணன் தான் பேச விரும்புறாங்க. ",என்றான் அசோக்.

" யார் அந்த பொண்ணு? போய் பேச வேண்டிய தானே! ",என்றாள் சித்ரா.

" உன் ப்ரண்ட் நந்தினி தான் அது! ",என்றான் அசோக்.

" ஐயையோ! பத்ரகாளியா? நான் கிளம்புறேன் அண்ணா. ஆள விடுங்க சாமி. ",என்று கூம்பிட்டு விட்டு தோழிகளிடம் வந்து நின்றாள் சித்ரா.

தோழிகளெல்லாம் என்னவென்று விசாரித்தார்கள்.

" எனக்கு தெரியாது! ",என்று கூறினாள் சித்ரா.

நந்தினிக்குப் புரிந்துவிட்டது. இருந்தாலும் அமைதியாக நின்றாள்.
அவ்வப்போது யாரும் பார்க்காத போது சிவாவைப் பார்த்தாள்.

பஸ் வந்தது. எல்லாரும் ஏறினார்கள். நந்தினி மட்டும் தனக்கு தலைவலி என்று கூறி விடுப்பு சொல்ல சொல்லிவிட்டு பேரூந்தில் ஏறாமல் நின்றாள்.

" என்னடி ஆச்சு இவளுக்கு! ",என்று தோழிகள் யோசிக்க பஸ் நகர்ந்தது.

நந்தினி மட்டும் நின்றிருந்தாள்.

அதைக் கண்ட அசோக், " அண்ணி மட்டும் தான் நிக்காங்க. போய் பேசுங்க அண்ணா. ",என்றிட, சிவா நந்தினி அருகில் சென்றான்.

" என்ன? ",என்று கேட்பதைப்
நந்தினி சிவாவைப் பார்த்தாள்.

" அது வந்து! அது வந்து! "

சிவா உளறினான்.

" எது வந்து? ",என்று நந்தினி மிரட்டினாள்.

" இல்லைங்க. நான் சும்மா தான் இருந்தேன். தம்பி தான் ஏத்திவிட்டுட்டான். "

அசோக்கைப் பார்த்தாள்.

" நான் இல்லை சாமி. ",என்று சைகை செய்தான் அசோக்.

" அப்போ நீங்களா பேச வரலையா? ",என்று சிவாவிடம் கேட்டாள் நந்தினி.

" இல்லை. நானாதான் வந்தேன். ஆனா அத எப்படி சொல்லுறதுனு தான் தெரியல!. "

டென்சனில் வியர்த்துவிட்டது சிவாவிற்கு.

" இது சரிப்பட்டு வராது! ",என்று நினைத்த நந்தினி, " உன்னை பார்த்தாலே எனக்குப் பிடிக்கல. உன்னை பற்றி யார் பேசனாலும் எனக்கு பிடிக்கல.
ஆனா? ",என்று நிறுத்திக் கொண்டாள்.

" என்ன ஆனா? அப்புறம் என்ன? பிடிக்கலலா. போக வேண்டிய தான! "

சிவாவிற்கு தைரியம் வந்துவிட்டது.

" ஐயையோ! பெரிய சண்டையாகிவிடுமோ! ",என்று நினைத்த அசோக், " அண்ணன் கோபப்படாதீங்க. பொறுமையா பேசுங்க. ",என்றான்.

" நீ கொஞ்சம் வாயை மூடுறியா!? ",என்று அசோக் பக்கம் திரும்பினாள் நந்தினி.

" ஏய்! என்னை திட்டு! பொறுத்துக்கிடுவேன். ஆனா, என் தம்பிய திட்டாத. அப்புறம் அவ்வளவு தான்! ",என்றான் சிவா.

" சரி தான். பெரிய தம்பி! போ. அவன் கூடவே போ. ",என்றாள் நந்தினி.

" டேய் தம்பி! நான் அப்பவே சொல்ல, இதெல்லாம் சரிபட்டு வராதுனு ",என்று சொல்லிக் கொண்டே அசோக்கை நோக்கி வந்தான்.

" டேய் சிவா! நில்லுடா! ",என்று நந்தினி கூற, நின்றவன் திரும்பினான்.

எதிர்பாராத அச்சமயத்தில் சிவாவின் கன்னத்தில் முத்தமிட்டு, " ஐ லவ் யூ டா மாமா! என் செல்லக் கிருக்கா! ",என்று கூறிவிட்டு தன் வீடு நோக்கி ஓடினாள் நந்தினி.

" நடந்தது கனவா? நனவா? ",என்ற சிந்தனையில் கன்னத்தைத் தடவியபடி நடுரோட்டில் நின்றிருந்தான் சிவா.

அசோக் வந்து அழைத்து சென்றான்.
அசோக் பைக்கை ஓட்டக் கன்னத்தைத் தடவியபடியே கவிதையொன்றை மனதில் தீட்டினான், " கன்னியின் உள்ளத்தில் இருப்பதை கண்களும், உதடுகளும் சொல்லவில்லையே!
பிடிக்குமோ, பிடிக்காதோ என்று மன யுத்தம் நடத்திக் கொண்டிருந்தேன்.
கன்னத்தில் முத்தமிட்டு மன யுத்தம் நிறுத்தி, தெளிவு தந்தாள் தன் காதல் சொல்லி.
இனி அவளோடு மட்டுமே நான்... ",என்று.

வீடு சென்றடைந்ததும் தன் டைரியில் பொறித்து வைத்துக் கொண்டான் எழுத்துகளாய்..

மாலை நேரம், சித்ரா வீட்டுக்கு வந்தாள்.

அசோக் மட்டும் எழுதிக் கொண்டிருந்தான்.

" என்னாச்சு! அண்ணன் பேசுனானா? ",என்று மெதுவாகக் கேட்டாள் சித்ரா.

" அண்ணன் பேசப் போனான். கண்ணாப்பிண்ணானு திட்டிட்டா மா! ",என்று அசோக் சோகமாகச் சொன்னான்.

" என்ன? அண்ணன் என்ன சொன்னான்? இப்போ எங்க? ",என்றாள் கவலையோடு.

" மேல மாடில இருக்கான். ",என்றான் அசோக்.

மேலே போய் பார்த்தாள் சித்ரா.

சிவா சோகமா இருக்க மாதிரி இருந்தான்.

" நந்தினி வரட்டும். பேசிக்கிறேன். ",என்று நினைத்துக் கொண்டு கீழே வந்தாள் சித்ரா.

இரவு சாப்பாடு முடிந்ததும், அசோக்கும், சிவாவும் வாக்கிங் சென்றார்கள்.

முன்போலவே அந்த தள்ளுவண்டி கடைக்குத் தான்.

கடை முன் போடப்பட்டிருந்த பிளாஷ்டிக் நாற்காலியில் அமர்ந்தான் சிவா.

" அண்ணன் ரெண்டு சுக்குக் காப்பி கொடுங்க. ",என்றான் அசோக்.

சிவா மொட்டை மாடியைப் பார்த்திருக்க, நந்தினி வந்தாள்.
சைகைகளில், கண் ஜாடையில் பேச்சு வார்த்தை தொடங்கியது.

" சிவா அண்ணன் இந்தாங்க! சுக்குக் காப்பி. ",என்று கொடுக்க, சிவா கிளாஷை வாங்கியதைப் போல சுக்குக் காப்பி குடிக்க, " அண்ணன் கிளாஷ் இங்க இருக்கு. ",என்றான் அசோக்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Jan-18, 11:49 am)
பார்வை : 121

மேலே