கடவுள்

இன்று ஏதோ
ஓர் இடத்தில்
நான் அமர்ந்து
ஆசுவாச படுத்திக்கொண்டிருகிறேன்

இன்று எனக்கு
அதிசயங்கள் மீது
நம்பிக்கை இருக்கிறது
மனிதர்கள் மீதும் தான்!

எதிர்காலத்தை
ஏறெடுத்து பார்த்தேன்
உற்சாகமும், நம்பிக்கையும்
இருந்தது.

அப்படியே லேசாக
கடந்த காலத்தின் மீது
பார்வையை திருப்பினேன்

நிறைவும் , பெருமையும்
திரையிட்டிருந்தன

திரையை மெல்ல
விளக்கி கடந்த
காலத்தை
எட்டி பார்த்தேன்

நான்
ஓடிக்கொண்டிருந்தேன்

நிச்சயமாய்
தனியாய் இல்லை
கும்பலோடு தான்
ஓடினேன்...

வனாந்தரம், பாலைவனம்,
முற்காடு,
பள்ளத்தாக்கு,
பாறைகள்
எல்லாவற்றின்
வழியும் நான்
ஓடினேன்...

பல முறை
தவறி விழுந்து
உருண்டிருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்
ஒரு கூட்டம்
என்னை மேலே
தூக்கிக் கொண்டு வந்தது!

எக்கச்சக்க காயங்கள்
ஒவ்வொரு காயத்தின்
வழியும் ஆழமாய்
ஒரு பாடம் விரிந்தது...

அப்பப்பா.....
எத்தனை வலிகள்,
எத்தனை வேதனைகள்,
எத்தனை ரணங்கள்...

'இத்தனையும்
நான் எப்படித்தான்
கடந்து வந்தேனோ.....!'
வியப்புக்குறியின்
எதிரே....
கருணை நிறைந்த கண்களோடும்,
மெல்லிய
புன்னகையோடும்
நின்றிருந்தார்
என் பாசமிகு
கடவுள்......

எழுதியவர் : அனுசுயா (16-Jan-18, 10:51 am)
Tanglish : kadavul
பார்வை : 92

மேலே