எனக்கு என்னுடன் வாழ முடியவில்லை

எனக்கு என்னுடன் வாழ முடியவில்லை

எனக்கு என்னுடன் வாழ முடியவில்லை.
என்னுடன் வாழ்கின்ற
என்னுடன் வாழ்வதில்தான்
எத்தனை போராட்டங்கள்
எனக்கு
என் துணைவியுடன்
எனது மகன், மகளுடன்
எனது உடன் பிறந்தவனுடன்
ஏன் என்னைப்போன்றே குதர்க்கம் பேசுகின்ற
என் நன்பனுடன் கூட
வாழ முடிகின்றது.

என்னுடன் வாழ்வதில்தான்
என்னுலுள் ஏராளனமான குழப்பங்கள்.
எந்த என்னுடன்?
என் மனைவியை மகிழ்விக்கும் கணவனான
என்னுடனா?
என் குழந்தைகளின்
என்னுடனா?
சமுதாயத்தின், உறவினரின் சுற்றத்தாரின்
என்னுடனா ?
இல்லை இல்லை!
எனது என்று நினைத்திருந்த
எனது உன்னத கொள்கையுடனா?
எனக்குத்தெரியவில்லை.

எனது சிந்தனையுடனா?
எனது புறவக உலகிலிருந்து
எனது அகவய உலகம்
என்னை அடித்து நொறுக்கி சண்டையிடும்போதுள்ள
என்னுடனா?
உலகம் உன்னுடையது
உயர்ந்து சொல், செயல்படுவென
உலாவந்த காலம்போய்
ச்சீ! இதற்காகவா வாழ்கின்றோம்
என்ற உள்ளுருத்தல் குத்துவதால?

எல்லா உன்னத பண்புகளையும்
மற்றவர்களுக்கு போதித்து விட்டு
உள்ளூர எதனையும் ஏளனம் செய்து
எதனையும் நடைபிடிக்காமல்,
அந்த கபட வேடத்தினாலா?

தெரியவில்லை
ஆனால் ஓன்று மட்டும்
தெளிவு
என்னால் என்னுடன்
நான் நேசிக்கின்ற என்னை
என்னால் என்னுடன் வாழ விடமுடியவில்லை.
ஏனென்றால்
என்னால் என்னுடன் வாழமுடியவில்லை.

இராமானுஜம் மேகநாதன்
தேசிய பள்ளிக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம்
புது தில்லி 110016

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (16-Jan-18, 9:14 am)
பார்வை : 119

மேலே