எல்லாம் பெருமைக்காக

குத்துண்டு மாய்வார் கண்டு மகிழும் மனமும் தங்கத்தமிழ் நாட்டிலே உண்டு...

வீரம் வீரம் என்று கூச்சலிடுவார் தன்னில் நிறைபெற வீரந்தன்னில் முட்டி மோதி மடியத் துணிந்து...

அன்புடைய மகனையும், கட்டிய மனைவியையும் தவிக்கவிட்டு குத்துண்டு சாவதிலே பெருமையா?
முட்டாள்களின் அறியாமையேயன்றி வேறில்லை இது...

நாட்டுக்குள் அடக்க வேண்டிய மனித மிருகங்களே அதிகமாயிருக்க,
வாயில்லா சீவனை வதைப்பது இவர்கள் வீரமாம்...

பெருமை பெருமை என்று வீழ்ந்து கிடக்கிறது நாட்டின் நிலை...
அன்பில்லா முட்டாளோ தினமும் புசிக்கிறான் மாட்டுக்கறி...

சிங்கம், புலி, சிறுத்தைகளெல்லாம் மிக மென்மையான விலங்குகள், மனிதனென்ற கொடியவனை ஒப்பிடுகையில்...

காலம் தரும் சேதி முட்டாள்களுக்கு புரியுமா?
தினமும் மாமிச இறைச்சியுண்டு நான் உடல் பெருத்திருந்தால் சிந்திக்கும் ஆற்றலும் இறந்திருக்குமா?

மதிகெட்ட மாந்தரை ஊக்குவிக்கும் மதத்தையும் சாடுவேன்...
கருணையற்ற செயலை பெருமையென்றிடும் இனத்தையும் சாடுவேன்...

நல்மதி வேண்டும்...
உலகிற்கே தமிழகம் முன்னுதாரமாகத் தெரிய வேண்டுமென்று எண்ணுகையில்,
எப்படி ஒரு மக்கள் வாழ வேண்டாம் என்பதற்குச் சான்றாய் நிற்கிறது பாரீர்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-18, 9:02 am)
Tanglish : ellam perumaikkaaga
பார்வை : 2903

மேலே