அழிந்து வரும் பறவைகள்
உலகில் அழிந்து வரும் இயற்கை உயிரினங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 8 பறவை இனங்களும் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்கள் மற்றும் விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் 8 இந்தியப் பறவைகளும் அழிவின் பிடிவில் இருப்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச பறவைகள் வாழ்வமைப்பு:
மும்பை இயற்கை வரலாறு சங்கம் மற்றும் சர்வதேச பறவைகள் வாழ்வு அமைப்புகள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அழிந்து வரும் பறவைகள்:
இதில் இந்தியாவில் அழிந்து வரும் பறவைகள் பட்டியலில் விரைவில் 173 பறவை இனங்கள் இடம் பெறும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்தியப் பறவைகளும் அடக்கம்:
மேலும் இந்த பட்டியலில் இந்திய பறவை இனங்களான கம்பளி கழுத்து நாரை, அந்தமான் நீலம், சிவப்பு தலை ஆந்தை, இமாலயன் கிரிபான், தாடி கழுகு, அந்தமான் பச்சை புறா, சாம்பல் நிற தலை பச்சை புறா, யுனன் நியுதாச் ஆகிய 8 பறவை இனங்கள் இடம் பெற்று உள்ளன.
பட்டியல் காட்டும் உண்மை:
காட்டு தீ, பெருகி வரும் கட்டிடங்களால் அழிந்து வரும் காடுகள், வேட்டையாடுதல், அதிகரிக்கும் வேதியியல் பொருட்களின் பயன்பாடு போன்றவற்றால் அரியவகை பறவை இனங்கள் அழிந்து வருவதாக அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.