வசீகரம்

எதை ரசித்துவிட்டப்பின்னால்
அது நம்மை
எளிதில் கடந்துபோகச் செயகிறதோ அது ஈர்ப்பு
எது அதற்குள்
நம்மை கட்டிவிடுகிறதோ
எது நம்மை ஆளுமை செயகிறதோ
அதுவே வசீகரம்
மீளக்கூடியது ஈர்ப்பு
மீள முடியாதது வசீகரம்
ஒரு குட்டிப்பூனையின் பச்சைநிற கண் மணிகளை
பார்த்து
இலயித்துப்போனதுண்டா
ஒரு போமெரியன் நாய்க்குட்டியின்
பழுப்பு நிற கண்மணிகளை
கடந்துபோக முடிந்ததுண்டா
மழலையின் முழிகளை கடந்துவிட்டப்பின்னால்
திரும்பி திரும்பி
அதை எத்தனை முறை பார்த்திருப்பீர்கள்
தம்பி ராம் அவர் பதிவில்
ரசிக்கும்படி சொன்ன எல்லாமே
நாம் கடந்து போகக்கூடியவைகள் தான்
என்றால் அவை ஈர்ப்பா
இல்லை வசீகரமா
இதோ இப்பதிவை ரசிக்கிறீர்கள்
இதையே எத்தனைமுறை ரசிக்கமுடியும்
ரசிப்பதற்கு பெயர்
வசீகரம் என்றால்
ஆளுமை செய்வதற்குப்பெயர் என்ன சொல்ல முடியும்
சில்க் ஸ்மிதாவின் கண்கள்
கருப்பு நந்திதாவின் மூக்குத்தி
மேலும் பல
ரசித்துக்கடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதே தவிர
அதற்குள் புதைந்து
ஆராய என்ன இருக்கிறது
இங்கே இருக்கும் அனுசரனையோ அவனுக்கு ஒரு ஜெனரேஷனுக்குப்
பின்னால் தொடரும் ராமையோ
கடந்தவைகள் தான் இவைகள் எல்லாம்
பலமுறை
பல விஷயங்களை கடந்துவிட்டோமானால்
அதை திரும்பிப்பார்க்கிற போது
மீண்டும் ரசிக்கத் தோன்றுமானால்
அது ஈர்ப்பு
ஒரு முறை ஒரு விஷயத்திற்குள் ஆழ்ந்துவிட்டு
காலம் கடந்தோ
இல்லை நிலுவையிலோ
திரும்பி பார்க்கிற போது
அது நம்மை
நம் நரம்புகளை
செயலிழக்கச்செய்யுமென்றால்
அதுவே வசீகரம்
ஈர்ப்பு என்றுமே அதன் வசம்
நம்மை சேர்க்கும்
ஒரு முறை நாம் ஒன்றுக்குள் ஆழ விழுந்துவிட்டு
அதிலிருந்து மீளமுடியாமல்
தத்தளித்து நடந்துகொண்டிருக்கும்போதே
அதைத் திரும்பி பார்க்கிற போது
இந்த போதைக்குள்ளிருந்து
எப்போதுதான் விடுதலை கிடைக்குமோ
என்று திணறச்செய்யும்
நிகழ்வுக்குப் பெயர் வசீகரம்
தாளாத இன்பம்
வேண்டும் வேண்டுமென்றாலும்
அதை நெருங்கவிடாமல்
விலக்கிவைக்கிறோமென்றால் அது வசீகரம்
வசீகரம் ஒரு செய்வினை
குடுகுடுப்பைக்காரனால்
எலுமிச்சை
தலைச்சம்பிள்ளை மண்டை ஒட்டு மை
வரைமிளகாய்
வைத்துக்கட்டி
ஈடாப்பு வாசித்து இழுத்துவிடாத
செய்வினை
ஏவுவது எதுவாக இருக்குமோ
நினைத்திருப்பது அதுவாகவே இருக்கச்செய்வது
வசீகரம்

ஒரு முறை அல்லது இருமுறை ஆசைதீர கரமைதுனம் செய்துவிட்டால்
நினைவுப்பிசுகிலிருந்து விலகிப்போகும்
ஈர்ப்பின் நிகழ்வுமைக்கு
ஆளுமை விதைக்க முடியுமா
அதுதான் ஈர்ப்பின் ஆளுமை ஆகிவிட முடியுமா ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (18-Jan-18, 1:24 am)
Tanglish : vaseekaram
பார்வை : 429

மேலே