சித்திரப்பாவை
இப்படித்தான் என்னவள் இருப்பாள்
என்று என் மனதிற்கு சொல்லிவைத்தேன்
அதற்குள் தூக்கம் வந்து கண்களை
மெல்ல தழுவிக்கொள்ள நானும்
கனவுலகுக்கு சென்றுவிட்டேன் -அங்கு
நான் வடிவமைத்த சித்திர பாவை அவள்
சிற்பி செதுக்கா பொற்சிலையாய் என் முன்
என் மனக்கண்முன் நின்று காட்சி தந்தாள்
அது கனவென்று தெரியாது அப்போது
அந்த 'அவள்' என்னவளே என்று உள்ளம் சொல்ல
அவளிடம் சென்று பேசிடலாமா என் காதலை
சொல்லி அவளிடம் நல்ல பதில் ஒன்று பெறலாமா
என்று நினைத்தபோது கண் விழித்தேன் .............
அரை விழிப்பில் சுற்று முற்றும் தேடிய
என் கண்களுக்கு 'அவள்' தெரியவில்லை
விழித்துக்கொண்டேன் கண்டது கனவென்று
தெரிந்தபின்னால் விட்டுவிடவில்லை
எண்ணத்தில் வந்தமர்ந்து கனவில்
முழு உரு பெற்ற 'என்னவளை, நான்
சித்திரபாவையாய் தீட்டி வைத்தேன்
இதோ என்னறையில் அவள் சித்திரம்
அசைந்தாடுகிறது ....................
காத்திருப்பேன் கனவுக் கன்னி வருவாள்
என்னை அவள் மணாளனாய் ஏற்றுக்கொள்வாள்
என்று ...இவன் என்ன பித்தனா என்று
யார் நினைத்தாலும் என்னவள் அவள்தான்
என்று என் மனம் சொல்கிறதே !