கஜல் துளிகள் ==============

நான் ஞாபகம்.
நீ மறதி.
நீ ஞாபகமாய் மறந்துவிடுவதை
நான் மறக்காமல் நினைவில் வைக்கிறேன்,

உன்னை படைத்தபோது
பிரம்மனுக்கு ஞாபக மறதி.
இதயம் வைக்க மறந்துவிட்டான்.

நீ பயந்து ஓடும் அளவிற்கு
துரத்திக்கொண்டே வரும்
காதல் ஒன்றும் கடிநாய் அல்ல.

மார்கழி மாத மனவாசல்
கோலம் போடுவதும்
குப்பை போடுவதும் உன்கையில்.


காலியாய் இருக்கிறது ஆசிரியை வேலை
நீ மட்டும் விண்ணப்பம் அனுப்பு.
இதயம் உனக்கான பள்ளிக்கூடம்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (20-Jan-18, 1:44 am)
பார்வை : 154

மேலே