ராசவே உன்ன நம்பி - திகில் தொடர்- பகுதி - 05
♡♡♡ராசவே உன்ன நம்பி♡♡♡
- திகில் தொடர்- பகுதி - 05
சிறிது நேரத்தில் வைத்தியசாலையை அடைந்தார். வாசலிலே காத்துக்கொண்டிருந்தார். டாக்டர் அவரை கண்டதும் அவரின் அறைக்குச் அழைத்துச் சென்றார். அறையில் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்.
ராஜின் அப்பா : "டாக்டர்... என்ன டாக்டர்... இந்த நேரத்துல வர சொன்னீங்க என்னாச்சி உங்கட முகம் எல்லாம் மாறி போய் இருக்கு என்னாச்சி டாக்டர்"
டாக்டர் : "நீங்க எல்லோரும் போன பிறகு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி 2 பேருக்கும் எப்படி இருக்குனு அவங்கட ரூம்க்கு போனன் மருமகள் இன்னும் கண் திறக்க இல்ல மயக்கத்துல இருக்காங்க"
ராஜின் அப்பா : "இத சொல்லதான் வர சொன்னீங்களா இத போன்லேயே சொல்லி இருக்கலாமே என்னட வைப் அங்க தனியா இருக்கா"
டாக்டர் : "இது இல்ல அப்புறம் உங்கட பையன்ட ரூம்க்கு போய் கதவ திறக்க போனன் அவருக்கு பக்கத்துல கறுப்பு உருவம் ஒன்னு நின்னுச்சி பார்த்த உடனே என்னட உடபெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டு உடனே ரூம்க்கு பொய்ட்டன் அதுக்கு பிறகுதான் உங்களுக்கு கோல் பண்ணன்."
(டாக்டரின் பயமும் பதற்றமும் குறையவில்லை)
ராஜின் அப்பா : "டாக்டர் என்ன சொல்றிங்க நீங்களுமா பார்த்தீங்க"
டாக்டர் : "என்ன நீங்களுமானு கேக்கிறிங்க இதுக்கா முன்னால நீங்க பார்த்து இருக்கிகளா?"
ராஜின் அப்பா : "இல்ல டாக்டர் என்னட மருமகள் ஒரு தடவ கண்டதா சொன்னா அப்புறம் இன்டக்கி நாங்க வீட்ட போன நேரம் என்னட வைப் சொன்னா கண்டன்னு ஆனால் நான் நம்ப இல்ல இப்ப நீங்களும் சொல்றீங்க நம்பித்தான் ஆகனும்"
டாக்டர் : "உங்க வீட்ல என்னவோ இருக்குற மாதிரி இருக்குது"
ராஜின் அப்பா : "ஆமா டாக்டர் இந்த வீட்டுக்கு வந்த பிறகு சில பிரச்சினைகள் வரதான் செய்யுது"
டாக்டர் : "நான் சொல்ற எட்ரஸ்க்கு போங்க அங்க ஒரு சாமியார் இருக்காரு அவர்ட்ட நடந்தத சொல்லுங்க அவரு என்ன செய்யனும்னு சொல்லுவாறு"
ராஜின் அப்பா : "சரி டாக்டர் நான் பாக்குறன் காலையில வாரன் பிள்ளைகள் கவனம் டாக்டர் பொய்ட்டு வாரன்"
டாக்டர் : "சரி கவனமா போய்ட்டு வாங்க"
வீட்டிற்குச் சென்று அமைதியாக மனைவிக்கு தெரியாமல் உறங்கினார்.
காலை விடிந்ததும் இருவரும் வைத்தியசாலைக்குச் சென்றனர். ராஜையும் திவ்யாவையும் ஒரே அறையில் வைத்திருந்தனர். இரவரும் பிள்ளைகளின் அருகில் நின்று அழுது கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் திவ்யா கண் விழித்தாள்.
தொடரும்.....