தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி11
ஜெகனின் குடும்பத்தில் அன்பின் மகத்துவம் கண்டான் சிவா.
ஜெகனின் வழிகாட்டுதலோடு ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்கினான்.
அதோடு அன்பு பதிப்பகமும் பிரசவமானது.
அப்துல்லா என்ற நண்பனும் கிடைத்தான் சிவாவிற்கு..
அங்கு தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தான் சிவா.
அண்ணனைப் பிரிந்த அசோக்கிற்கு வருத்தம் அதிகமாக, சிவா நந்தினியிடம் சொன்ன வார்த்தைகள் ஊக்கம் தர, வீரம் தரித்து பழகினான் பல பயிற்சி..
அதன் ஆரம்பமே இந்திய இராணுவத்தில் சேர்ந்தான்.
தற்போது அவனுக்கு ஆபத்து ஏற்பட்டு எதிரிநாட்டில் வாழ்கிறான்.
மறுநாள் காலை, பெற்றோரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட சிவா தன் காதலியைக் கூட காணாமல், விரைவாக அப்துல்லாவின் உதவியோடு பாக்கிஸ்தான் செல்ல ஏற்பாடு செய்கிறான்.
அதே நேரத்தில் பாக்கிஸ்தானில் கலீல் தனது நண்பர் அமானின் அழைப்பின் பேரில், அமானுடைய இராணுவ நண்பர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றிருந்தான்.
எல்லைக்கு அருகில் இருந்த அவ்விடத்தில் அமான் கலீலை தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
எல்லா நண்பர்களும் அன்பாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
அன்றிரவு அங்கேயே தங்கிருந்தான் கலீல்.
மறுநாள் காலை நேரம்,
அப்பகுதியில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்க, எல்லோரும் துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.
கலீலை அமான் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுகையில், அசோக் வேகமாக பாய்ந்து துப்பாக்கியைக் கையில் எடுத்தான்.
தாக்க வந்த படையை நோக்கி தாக்கிக் கொண்டே முன்னேறி, காயப்பட்ட நண்பர்களை மீட்டான்.
தாக்க வந்த படை முழுவதும் அழிக்கப்பட்டது.
அமானிடம் வந்த கலீல் தனக்கு நினைவு வந்ததைக் கூறினான்.
" என் பெயர் அசோக். இந்திய இராணுவத்தில் மேஜராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
நானும், என் குழுவும் ஒரு முக்கிய வேலையை முடிக்கும் பொறுப்பில் இருந்த போது, இந்தியாவில் எல்லையோரத்தில் இந்தியாவிற்கு துரோகம் செய்யும் விரோதக் கும்பல்கள் அங்காங்கு இருப்பது குறித்து அறிந்தேன்.
சில கும்பல்களைத் தேடி அழித்தோம்.
முக்கியமான ஒரு கும்பல் பதுங்கி இருந்த இடம் தெரிந்து அந்த இடம் சென்றோம்.
அங்கு நடந்த போரில் என் குழுவில் இருந்த நண்பர்கள் பலர் காயமடைந்தார்கள்.
பல சிரமங்களுக்கு மத்தியில் அக்கும்பல் தலைவன் பிடிபட்டான்.
அவனை விசாரணைக்காக அழைத்துச் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது சில மர்ம நபர்களால் ஏற்பட்ட தாக்குதலில் நான் காயமடைந்ததால் மயக்கமடைந்தேன்.
எனக்கு மயக்கம் தெளிந்த போது நதியின் ஓரத்தில் சக்தியற்ற நிலை இருந்தேன். அப்போதே அதீஃபா என்னைக் கண்டாள். ",என்று கலீல் சொல்லியதைக் கேட்ட அமான் அதீஃபாவிற்கு தொலைபேசியில் கலீலுக்கு நினைவு வந்ததைக் குறித்து பேசினார்.
ஒரு பக்கம் அதீஃபாவிற்கு சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் கலீலைப் பிரிவதைக் குறித்து வருத்தம் கொண்டாள்.
இங்கு சூழல் இவ்வாறு இருக்கையில் அசோக்கைத் தேடி சிவா, தன் நண்பன் அப்துல்லாவோடு பாக்கிஸ்தானிய கிராமத்திற்கு வந்தான்.
அதீஃபா புகைப்படத்தைக் காட்டி விசாரித்து அதீஃபாவின் வீட்டிற்குச் சென்றார்கள் சிவாவும், அப்துல்லாவும்.
சிவாவைக்கண்ட அதீஃபா, " நீங்க யார்? ",என்று கேட்க, " என் பெயர் சிவா. இவர் என் நண்பர் அப்துல்லா ",என்று அறிமுகம் செய்ய,
அப்துல்லா, " வணக்கம். இவருடைய தம்பி அசோக், அதாவது கலீலை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். ",என்றான்.
அதைக் கேட்டு மாறிய அதீஃபாவின் முகத்தைக் கவனித்தான் சிவா.
சிறிது நேரம் மௌனம்...
மௌனம் களைத்த அதீஃபா, " நீங்கள் வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி சிவா. கலீல், என்னை மன்னிச்சுடுங்க. உங்க தம்பி அசோக் வந்ததும் நீங்க அழைச்சுட்டுப் போகலாம். ",என்று கூறிவிட்டு,
தன் பாட்டியிடம் தேநீர் கொண்டுவரச் சொன்னாள் வந்தவர்களுக்காக..
பிறகு அமானுக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தாள்.
அவரும் அசோக்கும் வந்து சேர்ந்தார்கள்.
அதீஃபாவைக் காண அசோக் வந்தான்.
அசோக்கைக் கண்ட அதீஃபா ஏதும் பேசவில்லை.
அழைத்துச் சென்று சிவாவிடம், " இந்தாங்க. உங்க தம்பி! ",என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
சிவாவைக் கண்ட அசோக் கட்டித் தழுவிக் கொண்டு, " அண்ணா! எங்க இருந்தீங்க? எப்படி இங்க வந்தீங்க?
",என்றிட சிவா நடந்ததை விவரித்தான்.
அசோக் அப்துல்லாவிற்கு வணக்கம் சொன்னான்.
பிறகு, தான் ஊருக்குச் செல்ல, தனக்கு உதவிய அனைவரிடமும் அனுமதி கேட்டான் அசோக்.
அதீஃபாவை மட்டும் பார்க்க முடியவில்லை.
அதீஃபாவின் பாட்டி அசோக்கிடம், அதீஃபா ஒரு புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னதாகக் கொடுத்தார்.
அசோக்கும் வேறொரு புத்தகத்தை அதீஃபாவிடம் கொடுக்கச் சொல்லி பாட்டியிடம் தந்தான்.
சிவா, அப்துல்லா, அசோக் மூவரும் கிளம்பினார்கள்.
சிந்து நதிக்கரையில் நதிவெள்ளத்தைவிட புனித கண்ணீர் வெள்ளம் அதீஃபாவின் கண்களில் வழிந்தோடியது.
பேரூந்தில் ஏறி இந்தியா வந்து சேர்ந்தனர்.
சிவா தான் வாழ்ந்த ஊருக்கு அசோக்கை அழைத்துச் சென்றான்.
அங்கே அன்பு இல்லமும், அன்பு பதிப்பகமும் கண்டு அசோக் மகிழ்ந்தான்.
அன்பு இல்லத்தில் அனைவரும் சிவாவின் மீது அதீத அன்பு கொண்டு இருந்தனர்.
" இது சோர்க்கம். ",என்றான் அசோக்.
" ஆம் தம்பி. அன்பு எங்கு வாழ்கிறதோ அது சொர்க்கம் தான். ",என்றான் சிவா.
அப்துல்லா சிவாவிடம், " மனதின் போர் புத்தகத்தை எப்போது வெளியிடலாம்? எல்லாப் பிரதிகளும் தயார். ",என்றிட, சிவா, " நாளைக்கே வெளியிடலாம். ",என்றார்.
அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
ஜெகனிற்கு அழைப்பு விடுத்தார்.
அன்பு இல்லத்தில் புத்தக வெளியீடு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதீஃபாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதீஃபா வீடியோ காலீங் மூலமாகப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்பாடு செய்யப்பட்டது போலவே விழா சிறப்பாக நடந்தேறியது.
புத்தகம் விற்பனை அமோகமாக நடந்தது.
நிறைய வாசகர்கள் விரும்பி வாங்கிச் சென்றார்கள்.
" தம்பி. நாளைக்கு நாம் ஊருக்கு போகிறோம், அப்பா,அம்மாவைப் பார்க்க. ",என்றான் சிவா.
" சரிங்க அண்ணா. ",என்றான் அசோக்.
அனைத்துப் பொறுப்பையும் அப்துல்லாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினார்கள்...