நாடித் துடிப்பே
குறிப்பு: கருப்பன் திரைப்படத்தில் வரும் "உசுரே உசுரே" பாடலை அதன் அசல் வரிகளுக்கு மாற்றாக ஒரு தாய் மகனுக்காக பாடுவது போல எழுதியது....
நாடித் துடிப்பே நீதானே
நீ வாடிப்போனா தாங்காதே!
உன் சிரிப்பே போதுமே
சிறுக்கி இவளுக்கு!
சீனிப் பாகா இனிக்கும்!
கவலை உனக்குன்னா
கலங்கும் எனக்குத்தான்
தனலா மனசு தவிக்கும்!
உனக்கு ஈடா
உலகம் பூரா
உறவேதும் கிடையாது உயிரோட்டமா!
நாடித் துடிப்பே நீதானே
நீ வாடிப்போனா தாங்காதே!
வெயிலுல நடந்தா
மழையில நனைஞ்சா
என் முந்தானை உனக்காக குடையாகுமே!
படிச்சு நீ களைச்சு
பட்டினியா படுத்தா
பிடிசோறு உனக்கூட்ட மனசாறுமே!
வேல கெடச்சு வெளியூரு போயி
குரல அனுப்பி எனத் தேத்துன!
ஏழை வீட்டு எலச்சோறு போல
எப்பவாச்சும் முகங்காட்டுன!
மறுஜென்மம் எடுத்தாலும் கூட
மகனா நீ பொறக்கத்தான் போற!
சாமிட்ட நான்கேட்க வேற இல்ல!
நாடித் துடிப்பே நீதானே
நீ வாடிப்போனா தாங்காதே!
ஆத்திரம் உன்மேல் ஆயிரம் இருந்தும்
அம்மான்னு நீ சொன்னா உருகிப்போறேன்!
உசுரு போகும் நேரத்தில்கூட
உன்னைப் பார்த்த பின்னதான் கண்மூடுவேன்!
உனக்கு ஒண்ணுன்னா ஓடோடி வந்து
உசுரக் குடுத்து காப்பாத்துவேன்!
வாழ்நாள் முழுக்க உனக்காக வாழ்ந்து
சாவுக்குப் பின்னாலும் காத்து நிப்பேன்!
எம்பாசம் என்னன்னு சொல்ல
எங்கேயும் வார்த்தையே இல்ல
தாயன்புக்கீடாக ஏதுமில்ல!
நாடித் துடிப்பே நீதானே
நீ வாடிப்போனா தாங்காதே!
உன் சிரிப்பே போதுமே
சிறுக்கி இவளுக்கு!
சீனிப் பாகா இனிக்கும்!
கவலை உனக்குன்னா
கலங்கும் எனக்குத்தான்
தனலா மனசு தவிக்கும்!
உனக்கு ஈடா
உலகம் பூரா
உறவேதும் கிடையாது உயிரோட்டமா!
நாடித் துடிப்பே.....