பெண் விடுதலை யாரிடம் உள்ளது

பெண் விடுதலை!
பெண் சுதந்திரம்!
பெண் பெண் என்று பல நூறு கவிகள் காப்பியங்கள் தோன்றினும், பெண் விடுதலை அச்சாணி மட்டும் முறிக்கிறதே ஏன்??

பெண் புனிதம் தான், ஆண் வீரம் தான், பெண்ணின் சில பணிகள் ஆண் செய்யவியலாது, அதே போல் ஆணின் சில பணிகள் பெண் செய்ய இயலாது, உண்மைதான் இந்த வேற்றுமையில் ஏன் ஆண்களை மட்டும் மிகை செய்கிறோம்... பெண்ணுக்கு வரைமுறை வைத்த சமூகம் ஆணுக்கு மட்டும் சுதந்திரத்தை அள்ளித் தெளித்தது ஏன்??. பெண்ணின் சுதந்திரம் எங்கே? யார் தடுப்பது??...

சிறு பெண் குழந்தை மனதில் நீ வீட்டு வேலைக்குத்தான் சரி என்று சொல்லி வளர்ப்பது ஏன்?? ஆண் குழந்தைக்கு தரும் சுதந்திரம் பெண் குழந்தைக்கு மறுப்பது ஏன்?? ஆணின் ஆசைகளை கேட்க்கும் காதுகள் பெண்ணின் ஆசையில் செவிடாவது ஏன்?? பெண் பிள்ளை வயதிற்கு வந்ததும் அதன் ஆசையும் வீட்டு வாசலில் புதைக்கப்படுவது ஏன்?? வளரும் போதே அடிமைத்தனத்தை விதைப்பது ஏன்?

ஏன்?? ஏன் ?? ஏன்??? ஏன்????? ஏன்???

இத்துணை கேள்விக்கும் பதில்கள் நம் வளர்ப்பின் முறைதானே.. பெண் சுதந்திரம் வேண்டுமா அது பெண்ணிடமே உள்ளது... குழந்தை வளர்க்கும் பெண்ணே! அன்னையே! கேள். வளரும் நாங்களும் உன் கருவில் வந்த விருச்சம்தான். ஆணை சுமந்த அதே மடிகள்தான் பெண் பிள்ளையும் சுமந்தது. நீ பெற்ற ஆண் பிள்ளயிடம் சொல் பெண் சமம் என்று, பெண் பிள்ளையிடம் சொல் ஆண் சமம் என்று. வலிகள் இருவர்க்கும் ஒன்று என்று சொல்லி வளர். நீ சொல்லும் பாடம்தான் அவர்களின் முதல் பாடம். உன் பாடத்தில் பேதம் சொல்லிக் கொடுக்காதே. பெண்ணை மதிக்க ஆண் பிள்ளையிடம் சொல்லி கொடு! ஆணை மதிக்க பெண் பிள்ளையிடம் சொல்லி கொடு!

இப்படி நீ வளர்க்க பழகினால், பெண் சுதந்திரம் அடைவாள். மாமியார் என்ற கர்வம் அகலும், மருமகள் என்ற கோபம் தீரும்.. குடும்பம் சமத்துவம் பெரும். சமூகம் சிறப்பு பெரும்... பெண் விடுதலை, சுதந்திரம், சமத்துவம் அனைத்தும் பெண்ணிடம் உள்ளது....

வரைமுறை அனைவருக்கும் உண்டு
வழிகள் நம் கையில் உண்டு
வாழ்க்கை நம் வளர்ப்பில் உண்டு...

பெண்ணிற்கு விடுதலை வேண்டும் என்று ஆணிடம் முறையிடாதே, பெண் விடுதலை உண்மையில் பெண்ணிடம் உள்ளது...
சமம் என்று சிறு வயது முதல் வளரும் குழந்தையிடம் இருந்து வளரட்டும் சமத்துவம்...
மதங்கள் அனைத்தும் பெண் சக்தியை போற்றுகிறது.
ஆனால் நாம் மட்டும் பெண்மையை போற்றவில்லை...
வாழ்க தமிழ்!! வளர்க வையம்!!

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (21-Jan-18, 1:29 pm)
பார்வை : 1346

சிறந்த கட்டுரைகள்

மேலே