உணவு
உணவு தனி மனித சுதந்திரம்..
மனதிற்கு மகிழ்ச்சி தரும்
உணவு அனைத்தையுமே
இரைப்பை செரிமானித்து விடும்.
துரித உணவில் தவறேதும் இல்லை..
பண்டைய உணவை யாரும் மறுக்கவும் இல்லை.
வணிகச் சந்தையில் உணவின் பங்கு
உச்சத்தை எட்டியுள்ளது..
விற்பனை மோகத்தில் உணவை
விற்பதற்கு பதில்
இவர்கள் விளம்பரங்களை விற்கின்றனர்.
ருசிக்க ஒரு பதார்த்தம்..
நன்கு பசித்த பின் உண்ண ஒரு பதார்த்தம்..
இப்படி மாறிவிட்டது நம் உண்ணும் பழக்கம்.
காலத்திற்கு ஏற்றார் போல்
நாகரிகம் என்ற பெயரில் நாம்
மாறிக் கொண்டதை போல..
உணவில் மாற்றமும் ஏற்க தக்கதே..
தன் வருமானத்திற்கு ஏற்றார் போல,
தன் ஜீவத்துவ பரிணாத்திற்கு தகுந்தாற்போல்
உண்ணும் உணவு என்றும் நன்மையே!