கல்லூரி வாழ்க்கை

கனவுக்கு விடையென நுழைந்தேன்,
களவுக்கு வழியென புரிந்தேன்.
நம்பிக்கைக்கு வழியென நினைத்தேன்,
என் நம்பிக்கையே கதியென கிடந்தேன்.

படிப்பிற்கான இடம் என இருந்தேன்,
பிழைப்பிற்கான இடம் ஒன்றை கண்டேன்.
முதல் நாளில் எட்டிய தொலைவில் வெற்றி என்று நினைத்தேன்,
கடைசியில் தொலைவை எட்டுவதே வெற்றி என்று திரிந்தேன்.

மாணவர்களின் வேசம் கற்றதாக
ஆசிரியர்களின் வேசம் கற்பித்ததாக
இதில் ஒற்றுமை.
செயலாளருக்கு ஒரு நிதி
பொருலாளருக்கு ஒரு நிதி
இதில் மட்டும் வேற்றுமை.

சமுதாயத்தில் உரிமையை பேசுவதற்கு கற்று கல்வி,
கல்லூரியில் பேச்சு உரிமை மதிப்பெண்ணுக்கு போனது.

களம் வெல்ல நினைத்து வந்த என்னை,
காலம் வென்று நான்கு ஆண்டுகள் போனது.

இரவில் கனவு என இருந்த என்னை,
இரவே கனவு என ஆனது.

படிப்பதற்கான நிஜம் என்று இருந்த கல்வி
நடிக்க வைத்தது என் நிழலைக் கூட
நடிப்பதற்கு கற்றுக் கொண்டோம்,
படிப்பதற்கு வழியில்லை.

உருவம் கொண்ட இயந்திரம் தெரிந்த நமக்கு,
உணர்வு கொண்ட மனிதம் தெரிவதில்லை.

இறுதியாக,
பணம் தேடுவது வாழ்க்கை அல்ல,
உன்னை தேடுவதுதான் வாழ்க்கை,
கண்மூடி நினைத்து பார்...
அந்த இருள் கூட சொல்லும் நீ இழந்ததை.

இனியாவது கல்வியை கற்க செய்வோம்,
விற்கும் சமுதாயத்தில்.
கரம் சேர்ப்போம், களம் வெல்வோம்.
நாளைய சமுதாயத்திற்காக..

CHANGE EVERYTHING YOU CAN!!!

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 9:58 pm)
Tanglish : kalluuri vaazhkkai
பார்வை : 5427

மேலே