உண்மை

நான் நினைக்கவில்லை, என் தாய்கூட
ஒரு வேளை சோற்றுக்கு
நிலாவை காட்டிய போது,

நான் உணரவில்லை, என் உடல்கூட
ஒரு வருட காலத்திற்கு
ஒரு உருவத்தை காட்டிய போது,

ஏமாறும் உலகத்தில் அனைத்து உறவும்
ஏமாற்றம் என புரியும்
நீ ஏமாறும் போது...

மாயமான உலகத்தில் அனைத்தும்
மாயம் என புரியும்
நீ மாயமாகும் போது...

பிறப்பில் தோன்றியது, இறப்பில் முடியும்
உயிர் மட்டும்
நீ தேடியது கிடைக்காமல்...

உண்மையை தேடு -அதில்
உன்னை மட்டும்...

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:11 pm)
Tanglish : unmai
பார்வை : 286

மேலே