வரம்
இறப்பில்லா *தாய்* வேண்டும்,
இல்லை யெனில், என்
உயிர் இழக்க வரம் வேண்டும்!!!
தளர்ச்சி யில்லா *தந்தை* வேண்டும்,
இல்லை யெனில், என்
விழி இழக்க வரம் வேண்டும்!!!
தாழ் வில்லா *உறவு* வேண்டும்,
இல்லை யெனில், அதை
சமன் செய்யும் வரம் வேண்டும்!!!
இழப்பில்லா *காதல்* வேண்டும்,
இல்லை யெனில், அவள்
நினைவை அழிக்க வரம் வேண்டும்!!!
பிரிவில்லா *நட்பு* வேண்டும்,
இல்லை யெனில், அந்த
நட்பின் நினைவு தொடர வரம் வேண்டும்!!!