இறைவன் ஓவியம் வரைந்தான்
இவளை ஆகாயம் அண்ணார்ந்து
பார்த்து ரசித்து நின்றது
ராகமம் கானமும் சேர்ந்து
இவளுடையது தான் காந்தர்வக்
குரல் என ஒருமித்துக் கூறின
திருஷ்டிப் பொட்டை இவள்
கன்னத்திலிட்டது வெண்ணிலா
அழகு நதி இவளிடம் அதிகமாய்ப்
பிரவாகம் எடுப்பதால்,
அதனை அருகே கண்டு
ஆனந்தப் பட்டது சிவப்பு ரோஜா
தான் வசிக்க ஆசைப்பட்ட இவளிதழில்
அமர தனக்கு இடம் கிடைத்ததால்,
மனத்தில் குணத்தில் தனத்தில் தேன் பிழியும்
தீங்கரும்பின் ஜீவ ரசம் கொண்டாள்
மாமரக் கொப்பிலே பழுத்த தேன்கனிகள்
இவள் அகக் கொப்பிலும் பழுத்ததால் மணத்ததால்
ஆக்கம்
அஷ்ரப் அலி