கம்பன் கவிதைகள்

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனுநெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான் மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே.

---------------------------------------------------------

புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்
உள்ளி யுள்ள எலாமுவந் ஈயும்அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே.

---------------------------------------------------------

பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

---------------------------------------------------------

எழுதியவர் : (23-Jan-18, 5:25 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 309

மேலே