காதல் மோகத்தில்
இனியவளே
உன் இதழின் ஒரு ஓரம்
எனக்கு சுவைக்க தருவாயா
அன்பு பெருமழைக்கு
அழைத்துச்செல்வாயா
திருடிய என்மனதை
திருப்பி தருவாயா
உன் மடியில் எனையும்
அழகாய் சுமப்பாயா
ஏங்கும் விழிக்காக
மலர் முகத்தை திறப்பாய
உன்னை சூழ்ந்த தேனிக்கு
சிறு உணவு அளிப்பாயா
என்இனியவளே
உன் வருகைக்காக
காத்திருப்பேன்
அதுவரை
நம் காதலின் நினைவில்
வாழ்ந்திருப்பேன்