இயக்கம் வேண்டாம்

நீ இல்லாத காலையில்
சூரியன் உதிக்க வேண்டாம்...

நீ இல்லாத மாலையில்
பிறைநிலா சிரிக்க வேண்டாம்...

நீ இல்லாத மொழியில்
கவிதைகள் பிறக்க வேண்டாம்...

நீ இல்லாத ரகசியங்களை
காதுகள் அறிய வேண்டாம்...

நீ இல்லாத கனவுகளில்
தூக்கங்கள் நெருங்க வேண்டாம்...

நீ இல்லாத இதயத்தில்
துடிப்பும் இருக்க வேண்டாம்...

நீ இல்லாத மழைத்துளி
மண்ணை தொட வேண்டாம்...

நீ இல்லாத தனிமையில்
வெட்கம் அனுக வேண்டாம்...

நீ இல்லாத நினைவில்
மறதிகள் பிழைக்க வேண்டாம்...

அன்பே,
நீ இல்லாத உலகில் - என்
உயிருக்கும் இனி இயக்கம் வேண்டாம்...

#கவிதை_கற்பனை_மட்டுமே

எழுதியவர் : ஸ்ரீதேவி (23-Jan-18, 7:06 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : iyakkam ventaam
பார்வை : 194

மேலே