சிறகுகள்

##சிறகு##
சிறைப்பட்ட சிறகுகளை
சுதந்திரச் சாவியிட்டு:
அவமானக் கூண்டிலிருந்து
அப்புறப்படுத்து!!!!!
முயற்சி சிறகடிக்க
பயிற்சிப் போதும்::
அந்த வானையும்
அளந்து விடலாம்!!!!!!
சிந்தனை சிறகடிக்க
சீற்றமாய் ஏற்றம் கொள்
தவறுகளைத் தட்டிக்கேள்:
தன்னம்பிக்கை கையோங்க
திமிராய் கர்ஜனை செய்
அநியாயம் அதிர்ந்தோடட்டும்!!!!
வெற்றிச் சிறகடித்து
உன் வீரச்சங்கை
முழங்கு ______எட்டுத்திக்கும்
ஒலிக்கட்டும்;
சுதந்திரச்சிறகுகளின்
சாதனை சரிதம்!!!!!!!