தோள் கொடு நண்பா

விண்ணை தொட்டு நிற்கும் என் தேசிய கொட்டியிற்கு
என் மரபின் மான்பு தெரியும்!
மண்ணுக்குள் புதைந்திருக்கும் என்
முப்பாட்டனின் இடுகாட்டில் முளைத்து நிற்கும்
புற்களுக்கு
என் நாடியின் மூலஸ்தானம் தெரியும்!

உடலை பிரித்து..
உருவம் கொடுத்து..
உயர வளர்த்து..
பேனிக்காத்து, ராணுவத்தில் சேர்த்தாள் என் மகராசி..
செய்தி வந்தது!
வீரமரணமடைந்தான் உன் உத்தமன் என்று..
இரு கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி மண்ணை முத்தமிட்டு மகிழ்ந்தாள்!
மகனே போய்வா..
வீரனே போய்வா..
உன்னை ஈன்ர பயனை பெற்றேன்!
..
உயிரை பிரித்து..
உணர்வுகளை கனவாக்கி..
விழிகளை மௌனமாக்கி..
வார்த்தைகளற்று - ஒர் வெள்ளை தேவதை.. உற்றவனை பார்த்து கொண்டிருந்த்து!
..
ஆயிரம் கேள்விகளை சுமந்த சின்னஞ்சிறு கண்கள்..
விடுப்பிற்கு வந்த தந்தை விட்டுச்சென்றான் என்பதை அறியாமலே விரல் சுப்பிக்கொண்டிருக்க..
தந்தையை தொட்டுப் பார்த்து அழுதது..
பாலிற்காக!
..
மீசையை முறுக்கி, புஜத்தினை திரட்டி,
விழிகளில் வீரம் பொங்க,
பகைவனை சுட்டு சாய்தான்
என் வீரபாலன்!
கயவன்! கள்ளன்!
துரோகம் சுமந்த குண்டினை
பாயச்சினான் மறைந்தபடி!
மான்டான் மண்ணின் மைந்தன்!
..
இது அவலம் அல்ல...
இதுவே அங்கிகாரம்,
மீண்டும் பிறப்பான்..
மண்ணில் முளைப்பான்
நம்மை காக்க!
தோள் கொடு நண்பா..
அவன் கணவுகளை, அதுவரை
நாம் சுமப்போம்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (24-Jan-18, 9:50 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 156

மேலே