பொங்கல் பாடல் கவிதை
காலப் பாதையின்
மற்றொரு மைல் கல்.
காலக் கரும்பின்
மற்றொரு கணு.
காலச் செடியின்
மற்றொரு மலர்.
கடந்ததை உருவாக்கி
நிகழ்வதைக் கருவாக்கிப்
புதியதை உருவாக்கப்
புத்தாண்டு அழைக்கிறது!
நமது சுவடுகளைப்
பதிவுசெய்யக்
காத்திருக்கிறது காலச்சாலை.
மானுட நேசத்தால்
மணக்கட்டும் என்றும்
வாழ்க்கைச் சோலை!