கடல் மாதாவே

உன்னை நம்பிவந்த
உன் மகனை
எங்கே நீ அழைத்து சென்றாய்
வாடும் அவன் குடும்பத்திற்கு
என்ன சொல்வேன் ,
அவள் அன்னை
அழைத்து சென்றால் என்றா !
உனக்கென உன் மகனை
அழைத்துக்கொண்டாய்
அவன் குழந்தையோ
அப்பாவின் அன்புக்காக
ஏங்குது
கண்ணீருடன் புகைப்படத்தை
கண்டே ......

எழுதியவர் : இராம்குமார் மு (24-Jan-18, 7:22 am)
சேர்த்தது : ராம்குமார் மு
பார்வை : 175

மேலே