விதியை மாற்றுவாேம்
யாருக்கு என்ன விதி யாரறிவார்
நாம் நினைப்பதாென்று நடப்பதாென்றாகி
நம் கனவுகளே கலைகின்றது
தாேற்றுப் பாேன நாட்களின் ஏமாற்றஙகளில்
வெற்றியின் உச்சங்களை சுவைக்க முடிவதில்லை
விதி வரைந்த பாதையில் ஆயிரம் சாேதனைகள்
இருளின்றி விடியலேது என்று
விடியலுக்காய் ஏங்கியே
இருளாேடு கழிகிறது நாட்கள் ...
நான்கு சுவர்களுக்குள் தனிமைப் பாெழுதில்
நாட்கள் கழிகிறது நாட்க்கணக்காய்
மாதங்களாகி வருடங்களாகியும்
மாறாத வா்ழ்க்கை ஒன்று
மாறும் என்று எண்ணி
மாற்றமின்றி தாெடர்கிறது
விபத்தாய் வந்த விதி
சரித்து விட்டது காேபுரத்தை
சாய்ந்தே கிடக்கிறது எழ முடியாமல்
பாதியுடல் உணர்வின்றி
படுக்கையிலே பாேட்டது கெட்ட காலமது
பல காேடி கனவுகள் பறந்தாேடிப் பாேனது
நல்ல நாள் வருமென்று காத்திருந்து
சலித்தப் பாேய் சாதிக்க துடிக்கிறது
சிறகிழந்த பறவை ஒன்று
வானத்தைப் பார்த்தால் பறக்க முடியாதென்ற
வாசகத்தை மாற்றி விட
மாறி விட்டாள் அவளும்....
தனிமையை விலக்கி இருளை கலைத்து
தன்னம்பிக்கையால் தடம் பதித்தாள்
சாதனைப் பெண்ணாகி
சரி்த்திரம் படைத்தவர்கள்
விதியை மாற்றியது பாேல்
தன் விதியை வென்றாள்
கனவுகள் பலித்தது.