நாண் ஈட்ட வா

உன் அருகே நான்!
என் அருகே நீ!
கூத்தும் கும்மாளமுமாய்
நம் சொந்தம்!
இரு கனவுகளும் கை கோர்க்கும்
- நாள் இந்நாள்!
உனக்கான மாலை எனக்கானது
எனது தோளில்!
உன் கரம் நான் பற்றி
என் கரம் நீ பற்ற -
இருரேகைகளும் உரசிப்பேசியது!
உன் விரல் தீண்ட -என் பாதம்
நெடுநாள் காத்து விட்டது
இனியும் தாமதிக்காகமால் வா!
காதலை சுமந்து
காலங்கள் கடந்து காத்து இருந்தேன்
இந்த நொடிக்காக
என்னவனே வா வந்து 'நாண்' ஈட்டு
ஏங்கி தவித்த என் கழுத்துக்கு
ஆறுதல் கூற வா!
நம் காதலை மெருகேற்ற வா!
மூன்று முடிச்சிட்ட வா!
காதலில் தேர்ச்சி பெற்று
உன் மனை‌வியாக்க வா!

எழுதியவர் : ஜெயதேவி கலையரசன் (25-Jan-18, 4:41 pm)
சேர்த்தது : jayadevi 810
பார்வை : 161

மேலே