மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் -----COMPILED by London Swaminathan

பிப்ரவரி 2018 ‘நற் சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- தை- மாசி மாதம்)

இந்த மாத காலண்டரில் மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்திலிருந்து 28 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.



முக்கிய விழா – பிப்ரவரி 13- மஹா சிவராத்திரி

அமாவாசை- 15 (சூரிய கிரஹணம்; இந்தியாவில் தெரியாது)

ஏகாதஸி விரதம்-11, 26





பிப்ரவரி 1 வியாழக்கிழமை



நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க



பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை



சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவன்றாள் வணங்கி

பிப்ரவரி 3 சனிக்கிழமை



புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி

பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய் கண ங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவரச் சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை



ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்

பிப்ரவரி 5 திங்கட்கிழமை



நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே



பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை

சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்





பிப்ரவரி 7 புதன்கிழமை

தாயிற் சிறந்த தயாவாவன தத்துவனே

–சிவ புராணம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)



பிப்ரவரி 8 வியாழக்கிழமை

மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்



பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை

மதுரைப் பெருநன் மாநகரிருந்து

குதிரைச் சேவகானாகிய கொள்கையும்



பிப்ரவரி 10 சனிக்கிழமை

தண்ணீர்பந்தர் சயம்பெறவைத்து

நன்னீர்ச் சேவகானாகிய நன்மையும்

–கீர்த்தித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)





பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன





பிப்ரவரி 12 திங்கட்கிழமை



இன்னிசை வீணையில் இணைந்தோன் காண்க



பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை

பத்தி வலையிற் படுவோன் காண்க





பிப்ரவரி 14 புதன்கிழமை



ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து

வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயின்

–திருவண்டப்பகுதி (மாணிக்க வாசகர், திருவாசகம்)





பிப்ரவரி 15 வியாழக்கிழமை



ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்





பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி



பிப்ரவரி 17 சனிக்கிழமை



ஆடக மதுரை அரசே போற்றி

கூடலிலங்கு குருமணி போற்றி

தென்றில்லை மன்றினுளாடி போற்றி



பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை



ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி



பிப்ரவரி 19 திங்கட்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி





பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி





பிப்ரவரி 21 புதன்கிழமை

மூவா நான்மறை முதல்வா போற்றி

பேராயிரமுடைப் பெம்மான் போற்றி

–போற்றித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)





பிப்ரவரி 22 வியாழக்கிழமை

நாடகத்தாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்



பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி

ஊனாகி யுயிராகி உண்மையுமாயின்மையுமாய்க்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே



பிப்ரவரி 24 சனிக்கிழமை

யானே பொய்யென் நெஞ்சும்

பொய்யென் அன்பும் பொய்

யானால் வினையே னழுதா

லுன்னைப் பெறலாமே



பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்



பிப்ரவரி 26 திங்கட்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடிரண்டும் மறியேனையே



பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை

சடையுளே கங்கை வைத்த

சங்கரா போற்றி போற்றி



பிப்ரவரி 28 புதன்கிழமை

பிழைத்தவை பொறுக்கையெல்லாம்

பெரியவர் கடமை போற்றி

–திருச்சதகம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)



–subham–








Tamil and Vedas

எழுதியவர் : (25-Jan-18, 4:59 pm)
பார்வை : 194

மேலே