அவளே அவள்
அவள் எண்ணங்கள்தாம் என்ன
கருவிதைத்து தளிர் துளிர்த்து
வான் நோக்கி செலுத்தவே நினைத்தாளோ...
பசித்திடாத வயிற்றை அவள்மட்டும்
பெற்றுக்கொள்ளவே பாடம்படித்தாலோ
சிசுவினது உயிர்வளர்த்து....
எதிலுமே சுயநலம் எங்குமே சுயநலம்
கண்டுமே அவள் நலம்
சேயினுள் வைத்தது எங்கனம்???
விதிர்விதிர்த்து மனம் உறைந்து
வலி உணர்ந்து ஈன்றெடுக்கும்
நாழிகைக்காய் ஏங்குகிறாள்...
அரிவையோ தெரிவையோ
மங்கையோ மடந்தையோ
மாதர்தாம் என்றுணர்த்த
கரு வடிக்க மாதாமாதம் தவமிருக்கிறாள்.....
காமமே கண்ணென ஆடவர்சிலர்
நினைத்த மார்பினில்
அவள் வயிற்று குழவிக்கெனவே
அம்மாவாய் உணவு சமைக்கிறாள் ...
அவள்தான் அவளுக்கு ஈடென எண்ணித்தான்
விட்டொழிந்தே குழப்பத்தை
வயிற்றை கிள்ளிய பசிக்கு
அம்மாவின் கைப்பிடி சோற்றை தேடிப்போனேன்...