இமைகளில் ஓரு துளி

நாட் குறிப்பேட்டின் பக்கங்களை
மெதுவாகப் புரட்டினேன்
ஓடிப் பாேன ஒன்பது ஆண்டுகள்
ஓடாேடி வந்தது
மாேதியடிக்கும் அலை புரண்டு
நுரையாக வந்து கரையாேடு மாேதும்
அது அழகென்று ரசித்தேன்
உன் ஞாபகத் துளிகள் நிறைகின்ற நேரம்
இமைகளில் ஒரு துளி
அது மட்டும் அழகில்லையே?

நாம் நடந்த வீதியெங்கும்
ஏங்கி ஏங்கி உனைப் பார்க்கின்றேன்
அந்த மாமரத்தின் நிழல் கூட
நெருப்பாய் சுடுகிறது
ஓய்ந்து பாேன வார்த்தைகள்
மீண்டும் தாெடருமா
கன்னத்தின் ஈரங்கள்
காய்ந்து தான் பாேகுமா
தந்து விட்ட ஞாபகங்கள்
மறைந்து பாேகுமா

கண்களால் எனை சிறைப்பிடித்த
என்னவனே
உன் சிரிப்புக்குள் எனை சிறகடிக்க
வைத்தவனே
அழகால் எனை ஆட்டிப்
படைத்தவனே
ஆயுளின் பாதியை தந்து விட்டுச்
சென்றவனே
என் இதயம் அறிந்த ஓருயிரே
என் கண்களின் ஈரம் புரிகிறதா

குறிப்பேடு நனைகிறது
புதைந்து விட்டேன் நினைவுகளில்
எழுதிய வரிகள் எலலாம்
உன் பெயர் சாெல்லி
ஏக்கத்தாேடு உனைத் தேட
எதிரே நீ இலலாத உண்மை
வெறுமையாய் தெரிகிறது
மிகுதிப் பக்கங்கள் கூட
உன் நினைவுகளை பதிக்கச் சாெல்லி
தானாகப் புரள்கிறது
இமைகளில் ஒரு துளி
கசியத் தாெடங்கியது

எழுதியவர் : அபி றாெஸ்னி (28-Jan-18, 1:00 pm)
பார்வை : 370

மேலே